கோயில் விவகாரத்தில் பிரபாகரன் கடமை தவறவில்லை!
தமிழ் பேசும் அமைச்சர் ஒருவர்கூட இல்லை என ஆதங்கப்படுகின்றவர்கள் எத்தனைப்பேர் தங்கள் பிள்ளைகளை தமிழைப் படிக்க தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்? நீங்கள் சமுதாயத்திடம் நடத்தி வந்துள்ள நாடகம் எடுபடாமல் போனதால்தான் ஒரே ஒரு தொகுதி தப்பிப்பிழைத்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்பதைக்கூடவா புரிந்துக் கொள்ளாமல் போய்விட்டீர்கள் என்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சுலிங்கம் தெரிவித்தார்.
இந்த ஒரு தொகுதியும் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை தருமத்தின் பக்கம் முடிவு காட்டும். அந்த வேட்பாளர் மாநிலமே விரும்பும் வேட்பாளராக இருக்க மாட்டார் என்பது நிட்சயமில்லை. இந்த ஒரு சீட்டை வைத்துக் கொண்டு நீங்கள் ஆடும் ஆட்டம், போடும் வேடம் வரும் 16-வது பொதுத் தேர்தலில் அந்த சீட்டும் நிலைக்குமா? என்பது ஒரு கேள்விக் குறையாக உள்ளது.
சமுதாயத்திடம் மஇகா நடத்திய அரசியல் சித்தாந்தம் போதும். சமுதாயத்தை ஏமாற்றியது போதும். இனி வௌவால் மாதிரி தலைகீழாக நின்றாலும் இன்றைய இளைய சமுதாயம் மஇகாவை ஆதரிக்கமாட்டனர். 63 ஆண்டுகள் அரசாங்கத்தில் இருந்த மஇகா கட்சியின் சார்பில் 11 ஆண்டு காலம் துணையமைச்சராகவும், பின்பு முழு அமைச்சராகவும், கூட்டரசு பிரதேச மஇகா தலைவராகவும் இருந்துள்ள சரவணன் செந்தூல் 103 ஆண்டு ஸ்ரீநாகம்மாள் கோயில் உடைக்கப்படும் வரை என்ன செய்துக் கொண்டிருந்தார்? என சுங்காய் ஜசெக சட்டமன்ற உறுப்பினருமான அவர் கேள்வி எழுப்பினார்.
கோயிலுக்கும் அந்த நிலத்திற்கும் சொந்தம் இல்லை என்ற சூழ்நிலையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் என்றாவது ஒரு நாள் மேம்பாடு காணும்போது அக்கோயில் உடைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கக்கூடும் என்பதை சரவணனுக்கு தெரியாமல் போனது என்று கூறப்போகிறாரா என்ன?
மேலும், இக்கோயில் குறித்து அவர் ஒரு காணொளியில், ஒற்றுமைத்துறை அமைச்சரும், பிகேஆர் உதவித் தலைவருமான வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி ஒரு பெண் என்றும் பாராமல் கண்ணதாசனுக்கு விழா எடுக்கும் சரவணன்தான் கொச்சை வார்தைகளால் அவரை சாடியும் பேசியுள்ளார். மேலும் அந்த காணொளியில் பழமொழி என்று அந்த அம்பாளையே கொச்சைப்படுத்திய விதம் கண்டிக்கத்தக்கது. மாறாக அந்த கூட்டத்தில் சிலர் கைதட்டி வரவேற்றுள்ளதையும் பார்க்க முடிந்தது என்றார் சிவநேசன்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதற்கு ஒப்பாக அந்த கட்சியில் உள்ள ஒருவர், கோயில் சிலை உடைப்புக்கு உண்ணாவிரதம் தொடங்கி 24 மணி நேரத்திற்குள் தலைவரின் ஆணைக்கிங்க விரதத்தை கலைத்து உண்ணும் விரதமாக மாற்றப்பட்டார். இதுதான் மஇகாவின் உண்ணாவிரதப் போராட்டம்.
கோயில் உடைப்பு விவகாரத்தில் முழுக்க முழுக்க தவறு செய்தவர்கள் மஇகாவும் அந்த கோயில் நிர்வாகமும்தான் என்பதை பத்திரிகை செய்திகளை படித்தப் பின்புதான் குறிப்பிடுகிறேன். அதன் முழு விபரம் எனக்குத் தெரியாது. அதே வேளையில் அந்த நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தனியார் நியாலத்தில் அமைந்துள்ள எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும், நிலத்தில் இருந்து அகற்றும் உரிமை அந்த நில உரிமையாளருக்கு இருக்கிறது. கடந்த 103 ஆண்டுகள் அக்கோயில் அங்கு இருந்துள்ளது என்றால், அந்த நிலத்தை கோயில் நிர்வாகம் பணம் செலுத்தி வாங்குவதற்கு முயற்சி செய்யாமல் போனது ஏன்? இந்த பிரச்சினை எந்த இடத்தில் நடந்தாலும் நீதிமன்றத்தில் சட்டமே வெற்றி அடைகிறது.
மஇகா வீர வசனம் பேச வேண்டாம். பேசியது போதும். மைக்கா ஹோல்டிங்ஸ் மூலம் 66 ஆயிரம் இந்திய பங்குத்தாரர்களுக்கு சொந்தமான 1-3 கோடி வெள்ளி பங்குபணம் குறித்து கேள்வி கேட்க கூட்டத்திற்குச் சென்ற தம்மையும் தமது மனைவியையும், எங்கள் அருகில் இருந்த மூத்தாட்டி சிலருக்கு அடையும் உதையும்தான் பங்கு பணத்திற்கு வட்டியாகக் கிடைக்கப்பெற்றோம் என சிவநேசன் வேதனையுடன் குறிப்பிட்டார்.
கோயில் பிரச்சினை இன்னும் ஒரு வாரத்தில் தீர்க்கப்பட்டுவிடும் என்று இப்போது சொல்லும் சரவணன்தான் இத்தனை ஆண்டுகள் மவுனம் காத்துவந்துள்ள நிலையில், பிரச்சினை தலைத் தூக்கியதும் ஒரு வாரம் தவணையை யாரிடம் கொடுக்கிறார் என்பதும் தெரியவில்லை. கோயில் நிர்வாகத்திடமா அல்லது காணொளி செய்தியிடமா?
நடந்த இந்த சம்பவம் குறித்து நண்பன் பத்திரிகை பக்க பக்கமாக செய்தியை வெளியிட்டது. இன்று இந்திய சமூகத்திற்காக யார் பேசுவது? சர்ச்சைக்கு முத்தாய்ப்பு வைத்த ஆலய உடைப்பு விவகாரம் என்று தலைப்பிட்டு எழுதுகிறது.
மற்றொரு பத்திரிகை கூட்டத்திற்கு பிரபாகரன் வருவாரா? அழைத்தால் வருவேன் என்று அதே பத்திரிகையில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பதில் அளித்துள்ளார். பிரபாகரனுக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு கொடுக்க வேண்டும். மஇகா அல்ல. இந்த விவகாரத்தில் பிரபாகரன் பொய்யுரைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய சொந்த பணத்தை சிலவு செய்துள்ளார். கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் அவர் ஓடி ஒளியமாட்டார். இந்த நேரத்தில் இந்த பத்திரிகைகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுகிறேன். எல்லா பிரச்சினைகளையும் சர்ச்சையாக ஆக்காதீர்கள். இந்த கோயில் நிலம் அரசுக்கு சொந்தமானதாக இருப்பின் நாம் முயற்சி செய்யலாம் என சிவநேசன் குறிப்பிட்டார்