மித்ராவை வழிநடத்த செனட்டர் சரஸ்வதி தகுதியானவர் – பி.கே.ஆர் இந்தியத் தலைவர்கள் கருத்து

மித்ரா எனும் மலேசிய இந்தியர் உருமாற்று மேம்பாட்டுப் பிரிவைப் பிரதமர் துறையிலிருந்து ஒற்றுமை துறைக்கு மாற்றப்பட்டது வரவேற்கக் கூடியது என பி.கே.ஆர் இந்தியர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சராக பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நியமிக்கப்பட்டு, மித்ராவை வழிநடத்துவதற்குச் சமூக அமைப்புகள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக உலு திராம் முன்னாள் சட்டமன்றம் உறுப்பினர் கோபாலக்கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இந்திய சமுதாயத்தின் சிக்கல்கள் தொடர்பாகத் தீர்வை நோக்கி நகர்வதில் முனைப்புக்காட்டி வரும் தலைவர்களில் ஒருவர்.

தமிழ்படித்து நல்ல தமிழ் பேசுகின்ற தலைவராவார் எல்லோரிடமும் இயல்பாகப் பழகும் தன்மை கொண்டவராகவும் இருக்கும் அவரைப் போன்றவர். மித்ராவின் வழி இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காறுவார் என நம்பிக்கை கொள்வோம் என கூலாய் எஸ்.கோபாலகிருஷ்ணன், பூச்சோங் அன்பா, பாங்கி பாலமுரளி, ரவிசங்கர் என பி.கே.ஆர் கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

துணை அமைச்சர் செனட்டர் க.சரஸ்வதி அவர்களுடன் பி.கே.ஆர் இந்தியர் தலைவர்கள்