‘துபாய் மூவ்’ – அன்வாரின் ஆட்சியைக் கவிழ்க்க புதிய சதியா?

‘துபாய் மூவ்’ என்று புதிதாகப் பேசப்படும் ஒரு கூற்று வெறும் ‘மைண்ட் கேம்: என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் துவான் இப்ராஹிம் துவான் மான் மற்றும் வான் அமாட் ஃபய்சல் வான் அமாட் கமால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலன் அரசாங்கம் மிகவும் அழுத்தமான விஷயங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மற்றும் பெர்சத்து இளைஞர் தலைவர் வான் அமாட் ஃபைசல் வான் அமாட் கமால் இருவரும் ‘துபாய் நகர்வு’ பற்றிய பேச்சை நிராகரித்துள்ளதோடு அது வெறும் வதந்தி எனத் தெரிவித்தனர்.

அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தை கவிழ்க்க “துபாய் மூவ்” என்று அழைக்கப்படும் ஒரு செயல்பாடு தொடங்கியிருப்பதாக அரசாங்கத்தின் சமூகத் தொடர்புத்துறையான ஜே கோம் வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பாக அவர்கள் இவ்வாறு பதிலளித்துள்ளனர்!