ஒருமைப்பாட்டுடைய சமுதாயமாக திகழ்வோம்

கோலாலம்பூர், ஜன.1-
மலேசிய சமுதாயம் ஒருமைப்பாட்டுடைய சமுதாயமாக திகழ வேண்டும். மேன்மைக்குரிய சமுதாயமாகவும் விளங்க வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்தச் சமுதாயத்தின் பங்களிப்பு என்பது இன்றியமையாததாகும்.
பிறந்துள்ள புத்தாண்டு நாட்டு மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு நன்மை தரும் ஆண்டாக இருக்கும் என்று தாம் நம்புவதாக ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முழுவதும் நாம் சாதித்தவற்றையும் சாதிக்காதவற்றையும் ஒருமுறை நினைத்து பார்த்து புதிய ஆண்டில் புதிய சிந்தனையோடு நாம் காரியங்கள் ஆற்றுவோம்.
நமது எண்ணங்களும் செயல்களும் ஒன்றாக இருப்பின் நிச்சயம் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற முடியும். அதே வேளையில், ஒற்றுமை என்னும் குறிக்கோளோடு நாம் நம் பயணத்திய தொடங்குவோம் என்று ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.