வெற்றி நிச்சயமென புத்தாண்டை வரவேற்போம்

கோலாலம்பூர், ஜன.1-
வெற்றி நிச்சயம் என்னும் கருப்பொருளோடு 2024 புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். இன்று மலர்ந்த புத்தாண்டில், நம் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து இனிதே இந்த ஆண்டை வரவேற்போம்.

நாம் கடந்து வந்த பாதையின் அனுபவத்தைக் கொண்டு, புதிய ஆண்டை வரவேற்போம். புதிய வெளிச்சத்தை பாய்ச்சுவோம். 2024ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கப் பாடுபடுவோம். பொருளாதாரம் வளர உழைப்போம், மகிழ்ச்சி பெருகும், அமைதியும், நிம்மதியும் கிடைக்கும், அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நேர்மையான, வெளிப்படையான நல்லாட்சி பெற்று, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வு மேம்படவும் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.வளமான நம் சமுதாயம், வலிமையானதாக உருவாகும் வகையில், இணைந்தே செயல்பட இப்புத்தாண்டு அமைய வேண்டும்.