பேரரசர் தம்பதியரின் புத்தாண்டு வாழ்த்து
கோலாலம்பூர், ஜன. 1-
மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா அமாட் ஷாவும் அவரின் துணைவியார் பேரரசி ராஜா பெர்மைசூரி துங்கு அஸிஸா அமினா மைமூனா இஸ்கண்டாரியாவும் மலேசியர்கள் அனைவருக்கும் தங்களின் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இன்று பிறந்துள்ள 2024 புத்தாண்டில் நாடும் மக்களும் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்று தாங்கள் பிரார்த்திப்பதாகவும் பேரரசர் தம்பதியர் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் தொடர்ந்து ஒற்றுமையும் நல்லிணக்கமும் நீடித்துவர வேண்டுமென்று தாங்கள் வேண்டிக் கொள்வதாகவும் இஸ்தானா நெகாராவின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் வளப்பமும் நன்மைகளும் செல்வங்களும் எப்போதும்போல் செழுமையுடன் இருக்க வேண்டும். பேரிடர்கள் மற்றும் அழிவுகளிலிருந்தும் அது பாதுகாப்புடன் இருக்க வேண்டும். உடல்நலம், ஒற்றுமை, நீடித்த நல்லிணக்கம் போன்ற அனைத்தும் நமக்கு உரித்தானதாக இருக்க வேண்டும் என்று பேரரசர் தம்பதியர் கூறியுள்ளனர்.