ஜப்பான் நிலநடுக்கம் – அரசாங்கம் நிலைமையைக் கண்காணிக்கிறது! – அன்வார்
ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இஷிகாவா பகுதியில் உள்ள மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் தங்கள் ஆறுதலைத் தெரிவித்தனர்.
வெளியுறவு அமைச்சு மற்றும் ஜப்பானில் உள்ள மலேசியத் தூதரகம் மூலம் அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து வருவதாக அன்வார் தமது முக நூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடினமான மற்றும் சவாலான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிமையும் பொறுமையும் அமையட்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மலேசியர்கள் யாரும் இந்தப் பேரிடரில் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறும்,
தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் டோக்கியோவில் உள்ள மலேசியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது!