‘துபாய் நகர்வு’ – அது முன்கூட்டியே எனக்குத் தெரியும்! – ஜாஹிட் ஹமிடி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சம்பந்தப்பட்ட நபர்கள் தரையிறங்குவதற்கு முன்பே “துபாய் நகர்வு” பற்றி தனக்குத் தெரியும் என்று துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சிலர் அங்கு சென்ற தருணத்தில் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சில அரசாங்கப் பிரதிநிதிகளின் அண்மைய ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பயணம் துபாய் நகர்வு பற்றிய ஊகங்களை எழுப்பின.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிக்கு ஆதரவை மாற்றக்கூடிய எம்.பி.க்களை அடையாளம் காண ஏஜெண்டுகளுக்கு இடையே பணிகளைப் பிரிப்பது தொடர்பாக அந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது!