முன்னாள் பிரதமர் – இரண்டு தனி செயலாளர்களுக்கு எம்.ஏ.சி.சி சம்மன்
கோலாலம்பூர், ஜன. 2-
மில்லியன் கணக்கான பண மோசடி தொடர்பாக விசாரணைக்கு உதவும் பொருட்டு முன்னாள் பிரதமருக்கும் அவரின் இரண்டு தனி செயலாளர்களுக்கும் எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அடுத்த வாரம் சம்மங்களை அனுப்பும் என்று அது வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர், ஒரு நாடளுமன்ற உறுப்பினர் இருவரும் அந்த அறவாரியத்தின் புரவலர்கள் என்று இணையத்தளம் ஒன்றில் தெரிவித்துள்ளது.
அவரும் அவரின் மனைவி, குழந்தைகள் ஆகியோர் சொத்துக் குவித்துள்ள சந்தேகம் காரணமாக எம்.ஏ.சி.சி விசாரணை நடத்தியது.
கோவிட் – 19 தொற்றின் போது தனிப்பட்ட சில நபர்களுக்குத் திட்டங்கள் வழங்கப்பட்டபோது பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எம்.ஏ.சி.சி அதன் விசாரணைகளை 2009ஆம் சட்டம், பண மோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, நிதி உதவி மற்றும் 2001 சட்டவிரோத நடவடிக்கையில் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை எம்.ஏ.சி.சி நடத்துகிறது.