ஆட்டத்தை மாற்றப் போகும் GAME CHANGER

புத்ராஜெயாவில் புதிதாக உருவாக்கப்பட்ட ‘சென்ட்ரல் டேட்டாபேஸ் ஹப்’ எனப்படும் மத்திய தரவுத்தளமான பாடு (PADU) , உதவி மற்றும் மானியங்களின் விநியோகம் திறம்பட மற்றும் அவர்களின் இலக்கு குழுக்களை சென்றடைவதை மட்டும் உறுதி செய்யாது, இது அரசாங்கத்தின் தகவல் கசிவுகளைத் தடுக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாடுவை வைத்து, தகுதியில்லாதவர்கள் – 3.5 மில்லியன் வெளிநாட்டினர், செல்வந்தர்கள் மற்றும் உயர் வருமானம் உள்ளவர்களை அடையாளம் காண முடியும் என்பதால், அவர்கள் உதவிகளைப் பெற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆட்டத்தை மாற்றியமைக்கும் கேம் சேஞ்சர் இது என்று அவர் கூறினார்!