இந்தியர்களுக்கான TEKUN நிதி அதிகப்படுத்தப்படும் – ரமணன் நம்பிக்கை!
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் Datuk Ewon Benedick அதன் துணை அமைச்சர் DATUK RAMANAN இருவரும் சந்தித்தனர்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தில் உள்ள தேசிய இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் எனப்படும் SPUMI இல் 30 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப அந்த நிதியை அதிகப்படுத்தும்படி தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் Datuk Ewon Benedick –ஐ தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அதன் துணை அமைச்சர் ரமணன் தெரிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவை அமைச்சர் இவோன் முழுமையாக ஏற்பதாகவும் அமைச்சரவையில் இது தொடர்பாகக் கலந்துரையாடி நல்ல முடிவைத் தெரிவிப்பதாகப் பதிலளித்துள்ளார்.
முந்தைய துணை அமைச்சர் செனட்டர் SARASWATHY KANDASMI அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் உள்ள இந்தியர்களுக்கான திட்டங்களை முழுமையாக நிறைவேற்றியுள்ள நிலையில் தற்போது இந்தியர்களுக்கான பொருளாதார வளர்ச்சித் திட்டத்திற்கான நிதியை அதிகரிப்பதில் தமது முழு ஒத்துழைப்பு இருக்கும் என அமைச்சர் இவோன் உறுதி அளித்துள்ளார்.
இந்தியர் தொழில்முனைவோருக்கான திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுதைத் தாம் உறுதிப்படுத்துவதாகத் துணை அமைச்சர் டத்தோக் ரமணன் நம்பிக்கை அளித்தார்.
#ramanan #kuskop #tekun #spumi #ewon #menteri #kementerian