வாகனமோட்டும் உரிமம், சாலை வரியைமைஜேபிஜே செயலி மூலம் இனி புத்துப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜன. 3 –
வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல், மலேசியர்கள் தங்களின் வாகனமோட்டும் உரிமத்தையும் (லைசென்ஸ்) சாலை வரியையும் மைஜேபிஜே (ஆலதுஞது) செயலி மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இப்புதிய சேவை மூலம் பொதுமக்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்த முடியும் என்பதுடன் சாலைப் போக்குவரத்து இலாகா முகப்பிடங்களில் காத்திருக்கும் நேரத்தையும் குறைக்க முடியும் என்று, போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

செயலி மூலம் வாகனமோட்டும் உரிமத்தையும் சாலை வரியையும் புதுப்பித்துக் கொள்ளும் இந்த வசதி, இப்போதைக்கு மலேசியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள மாநில ஜேபிஜே தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்தார்.

“இணைய மூலமான புதுப்பிக்கும் இச்சேவையின் பயன்பாட்டை ஊக்குவிக்க, அரசாங்கம் இலக்கவியல் ரீதியில் தங்களின் வாகனமோட்டும் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்வோருக்கு 5 வெள்ளிக் கழிவை வழங்கும். இக்கழிவுச் சலுகை இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்” என்று லோக் கூறினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி, மைஜேபிஜே செயலி மூலம் தங்களின் வாகனமோட்டும் உரிமத்தின் ஓர் இலக்கவியல் பதிப்பைப் பதிவிறக்கம் செய்ய மலேசியர்களினால் முடிந்தது. எனினும், அது ஒரு கட்டாய நடவடிக்கை அல்ல.

இந்த இலக்கவியல் பதிப்பு பதிவிறக்கம் மூலம், மலேசியர்களுக்குச் சொந்தமான தனியார் வாகனங்களும் சாலை வரியை காட்சிக்கு வைக்கத் தேவையில்லை. ஜேபிஜே சேவையை இலக்கமயமாக்கும் போக்குவரத்து அமைச்சின் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

இதனிடையே, பொதுமக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை முதல், மைஜேபிஜே செயலியில் இருக்கும் “கொங்சி எல்கேஎம்” (முடிபேளi டுமுஆ) எனும் புதிய செயல்பாடு மூலம், வாகன உரிமையாளர்களினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது தனிநபர்களுக்கு தங்களின் இலக்கவியல் சாலை வரியை பகிர்ந்து கொள்ள முடியும் என்று லோக் தெரிவித்தார்.

“இதற்காக வாகன உரிமையாளர்கள் வாகனத்தின் உரிம எண் அட்டை மீது கிளிக் செய்து அதன் பின்னர் “கொங்சி எல்கேஎம்” விசையை கிளிக் செய்தால், தங்களின் வாகனங்களைப் பயன்படுத்த தாங்கள் அனுமதி வழங்கி இருக்கும் நபருடன் இலக்கவியல் சாலை வரியை அவர் பகிர்ந்து கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

உதாரணத்திற்கு, ஒருவர் ஒரு வாரத்திற்கு தமது தந்தையின் காரைப் பயன்படுத்த எண்ணம் கொண்டிருக்கின்றார். அந்த தந்தை முதலில் “கொங்சி எல்கேஎம்” செயல்பாடு மூலம் தமது மகனுடன் இந்த இலக்கவியல் சாலை வரியை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதோடு, ஒருவர் எத்தனை நாட்களுக்கு அதைப் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றார் என்பதையும் தீர்மானித்துக் கொள்ள முடியும்” என்று லோக் தெரிவித்தார்.

இந்நிலையில் பகிர்ந்து கொள்ளப்பட்டதை ஒருவர் 24 மணி நேரத்திற்குள் செயல்படுத்தாவிட்டால், எந்த ஒரு பகிர்வையும் மைஜேபிஜே செயலி அழித்துவிடும். பாதுகாப்பு அம்சங்களுக்காக அவ்வாறு செய்யப்படுவதாக அவர் கூறினார்.