மாணவி ஷிவானி குடும்பத்தைச் சந்தித்த கல்வி அமைச்சு

குடியுரிமை ஆவணம் இல்லாத காரணத்தால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போன மாணவி ஷிவானியின் விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சு மாணவி ஷிவானியின் குடும்பத்தினருடன் சந்திப்பு நடத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகா மாணவரின் பதிவு, நிர்வகிப்பு தொடர்பாக முழுமையான பணிகளை மேற்கொள்ளும் என்று கல்வி அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது. பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத சூழல் காரணமாக இந்த விவகாரத்தில் தமக்கு உதவுமாறு மாணவி ஷிவானி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். முறையான குடியுரிமை ஆவணம் இல்லாத காரணத்தால் மாணவி ஷிவானி நான்காம் ஆண்டு கல்வி படிப்பைத் தொடர முடியாது என்று பள்ளி தரப்பு தெரிவித்திருந்தது.