யாராக இருந்தாலும் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினால் நடவடிக்கைதான்! – பிரதமர் எச்சரிக்கை!
பிரதமர் அல்லது அமைச்சரவை உறுப்பினர் யாராக இருந்தாலும் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.
நீங்கள் பிரதமராக இருந்தாலும், நிதியமைச்சராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் சரி, நாட்டின் பணத்தை திருடினாலோ, நாட்டின் செல்வத்தை தவறாகக் கையாண்டாலோ அவர்களுக்கு எதிராக எந்தவித பாரபட்சமுமின்றி, நாட்டைக் காப்பாற்ற நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என பிரதமர் தெரிவித்தார்
துன் மற்றும் டான்ஸ்ரீ உட்பட யாருடைய பதவிகளையும் பொருட்படுத்தாமல் MACC ஐ விசாரிக்க நாம் அனுமதிக்க வேண்டும், இல்லையெனில்,சிறிய மீன்களை மட்டுமே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் குறிவைப்பதாக விமர்சிக்கப்படும் என்று அன்வார் கூறினார்!