அரசாங்கத்தைக் கவிழ்க்க ‘துபாய் நகர்வு’ எதற்கு? ‘மாமா கடை நகர்வே’ போதும்!
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், ‘துபாய் மூவ்’ என்று பெயரிடப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்கும் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை பெஜுவாங் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ மர்சுகி யாஹ்யா கடுமையாக மறுத்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சில ஒற்றுமை அரசாங்க எம்.பி.க்கள் மற்றும் பெரிகாத்தான் தேசிய தலைவர்களுடன் டாக்டர் மகாதீர் எந்த ரகசிய சந்திப்பிலும் ஈடுபடுவது சாத்தியமில்லை என்று மர்சுகி விளக்கினார்.
கடந்த சில வாரங்களாக டாக்டர் மகாதீர் வெளிநாட்டில் இல்லாததே இதற்குக் காரணம் என்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான அவர் மேலும் கூறினார்.
.அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்றால் அதற்கு துபாய் மூவ் தேவையில்லை, எதிர்க்கட்சிகள் உண்மையில் வேலை செய்ய விரும்பினால் ‘மாமாக் கடை நகர்வு’ போதும் என்று அவர் சுட்டிக்காட்டினார்!