கல்வியின் முக்கியத்துவத்தைப் பெற்றோர்கள் உணர வேண்டும் – YB.R.யுனேஸ்வரன்
தங்கள் பிள்ளைகள் இளங்கலைக் கல்வியை மேற்கொள்வதற்குப் பெற்றோர்களின் பங்கு இருப்பதைப் போல, தனது செகாமாட் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கும் தாம் பொறுப்பு என செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் R.யுனேஸ்வரன் நம்பிக்கை அளித்துள்ளார்.
செகாமாட் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 10 இந்திய மாணவர்களுக்குப் புதிய மடிக்கணினிகள் வழங்கிய அவர் செகாமாட் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும்படி தொடர்ந்து விண்ணப்பங்களைத் தாம் பெற்று வருவதாகத் தெரிவித்தார். தற்போது ஏழ்மைநிலையில் இருக்கும் மாணவர்கள் தங்கள் கல்வியின் பயன்பாட்டுக்காகப் புதிய மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும். இவ்வாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களை இவ்வாண்டு தொடக்கத்திலேயே நிறைவேற்றுவதாக அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான மலேசிய இந்தியர் உறுமாற்றுப் பிரிவான MITRA, செகாமாட் நாடாளுமன்ற இந்தியர்களுக்காக வழங்கிய உதவி நிதியின் அடிப்படையில் இந்த புதிய மடிக்கணினிகள் வழங்கப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
MITRA வின் 100 மில்லியன் நிதியிலிருந்து மலேசியாவில் 72 நாடாளுமன்றங்களுக்குத் தலா 100,000.00 {நூறாயிரம்} என 7,190,542.00 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#MITRA #UNIVERSITI #INDIAN #STUDENTS #FREELAPTOP #PARLIMEN #SAGAMAT #RYUNESWARAN #YUNESWARAN #MITRAPARLIMEN #MITRAFUNDS #LAPTOP