PADU – வறுமையை ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றும்!
- பிரதமர்
Hardcore ஏழைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடு எனப்படும் தேசிய முதன்மை தரவுத்தளம் பயனாக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மேலும் வறுமையை ஒழிப்பதற்கு மிக முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2024ஆம் ஆண்டிற்கான மானியங்களை முறையாக வழங்குவதற்கு இந்தத் தளம் உறுதுணையாக இருக்கும்.
இதற்கு முன்னர் அமலாக்கப்பட்ட திட்டங்கள், மானியங்கள் எல்லாம் முறையாக உரிய மக்களுக்குச் சென்று சேர்வதில் சிக்கல் இருந்தது.
குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவில்லை என ஆய்வுகள்ன் காட்டுகின்றன. அதுமட்டுமில்லாமல் பெரும் பகுதி மானிய நிதிகள் பணக்காரர்களால் அனுபவிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் முடிவு கட்ட, இது போன்ற சிக்கல்கள் இல்லாமல் இருப்பதற்காகத்தான் பாடு உருவாக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.
தற்போது அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட சுமார் 80 பில்லியன் ரிங்கிட் மானியங்களில் 3.5 மில்லியன் வெளிநாட்டினர் மற்றும் பணக்காரர்களால் அனுபவிக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்!