இந்தியர்களின் அரசு சாரா இயக்கங்களினால் என்ன பயன்? 

லாவண்யா ரவிச்சந்திரன் 

இஷாந்தினி தமிழரசன் 

மலேசியா முழுவதும் இந்தியர்களின் பல அரசு சாரா இயக்கங்கள் இயங்கிவரும் நிலையில் அவற்றின் பயன் தான் என்ன? அரசாங்கத்தின் ஆட்சி நிலைத்திருக்க ஏன் அரசு சாரா அமைப்புகளின் தேவை அதிகமாகிறது? அதிலும் குறிப்பாக, மலேசிய நாட்டில் இந்தியர்களுக்கென பல அரசு சாரா இயக்கங்கள் உள்ளன. இந்தியர்களின் அரசு சாரா இயக்கங்களினால் என்ன பயன்?  

தற்போது நடப்பிலுள்ள அரசு சாரா இயக்கங்களே கேள்வி குறியாக இருக்கும் வேளையில் அதிகமான இயக்கங்கள் தொடங்கப்பட்டு தான் வருகிறது. இயக்கங்கள் இருப்பதும், புதிய இயக்கங்கள் தோன்றுவதும் ஏற்றுக் கொள்ளகூடியதுதான். ஆனால், இதனால் யாருக்கு லாபம்?  

ஓர் அரசு சாரா இயக்கம் என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்பு அல்லாமல் சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதியளிக்கப்படும் அமைப்புகள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்காக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை.

பல்வேறு நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற அமைப்புகள் இயங்கி வருகின்றன. உலக அளவில் 40,00,000 அரசு சார்பற்ற அமைப்புகள் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் இயங்குபவை இவற்றைவிட மிகவும் கூடுதலாகும்.

நாட்டில் இந்தியர்களுக்கென பல அரசு சாரா இயக்கங்கள் இருப்பதால் அது மக்களுக்கே சில வேளைகளில் சிக்கலாக அமைந்துவிடுகிறது. 

பல இயக்கங்களிலிருந்து பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், மக்களிடையே ஒற்றுமை உணர்வை  குறையச் செய்கிறது. ஒரே குறிக்கோளுடன் செயல்படாமல் பல குறிக்கோள்களுக்காக பல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், மக்களிடையே எதை நம்புவது; யாரை நம்புவது என்ற குழப்பம் தான் எழுகிறதேத் தவிர, சரியான முறையில் அனைத்தும் சென்று சேருகிறதா என்றால் பதில் கூறுவதில் குழப்பம் தான் ஏற்படும். 

அதோடு, பல இயக்கங்கள் இருப்பதால் மக்கள் யாரிடம் உதவி பெறுவது என்பதை நிர்ணயிப்பதிலும் சிக்கல்கள்தான். அதிலும் குறிப்பாக, பல இயக்கங்கள் இயங்குவதால், அரசாங்கம் இந்திய அரசு சாரா இயக்கங்களுக்கு என ஒதுக்கும் நிதி பற்றாக்குறையாகிறது. மக்களுக்கு நலன் செய்வதில் யார் வெற்றியாளர் என்ற போட்டி நிலவுகிறது. 

ஒரே மாதிரியான நடவடிக்கைகளே பல இயக்கங்களில் மேற்கொள்ளப்பட்டால் மக்களின் பிற தேவைகள் எப்போது பூர்த்தி செய்யப்படும்? மக்களின் நலனுக்காக இவ்வரசாங்கச் சார்பற்ற இயக்கங்கள் இயங்குவதாக இருந்தால், ஏன் இந்திய மக்களின் நிலையில் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை என்பதே விவாத்திற்கு உட்பட்டதாகிறது.

மக்களின் நலனில் அக்கறை அதிகமாவதை விட மக்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யபடமால் இருப்பதுதான் அரசு சாரா இயக்கங்களின் எண்ணிக்கை உயர்வுக்குக் காரணமா என்பதும் விவாத்திற்குட்பட்டது. 

ஒரு குடையின் கீழ் அனைவரும் இருந்தால் தான் ஒரு நோக்கத்தையே அடைவதற்குப் பல நல்ல திட்டங்களைச் செய்ய முடியும். தனித்தனியே செயல்பட்டால் பொதுநலமாகவும் ஒற்றுமையுடனும் செயல்படுவதில் நிச்சயம் சிரமத்தை எதிர்நோக்க நேரிடும்.  

உதவித்தொகைகள் அல்லது வேறு உதவிகள் செய்வதில் எத்தகைய மக்களுக்குப் போய் சேருகிறது என்பதை கண்டறிவதிலும் சிக்கல்தான். பல இயக்கங்கள் இருப்பதை விவாதம் செய்யாமல் இவ்வியக்கங்களினால் எவ்வகை மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். உதவிகள் ஏற்பாடு செய்தால் அனைவருக்கும் சென்று சேருவதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட இயக்கங்கள் மட்டுமே செயல்பட்டு முதன்மை இயக்கத்திடம் அதனை ஒப்படைக்க வேண்டும். இதுவே, நாட்டின் தரமான தேவையாக அமைகிறது. 

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் பொது புலனக்குழு (வாட்சாப்), துணுக்காடல் (டிக்டோக்)போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பெரியோர் முதல் சிறியோர் வரை சென்று சேர்க்கப் பயன்படுத்தலாம். 

ஆண்டுதோறும் திட்டங்கள் மேற்கொள்ளும் போது முதன்மையாக விளங்கும் சில இயக்கங்களுடன் சந்திப்பு கூட்டங்கள் நடத்தி தேவையின் அடிப்படையில் செயல்படுத்த முன்வர வேண்டும். குறிப்பிட்ட சில தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மட்டும் அமல்படுத்தப்படுவது சரியில்லை. பொதுமக்களா அல்லது மாணவர்களா என்று பார்க்கும் பொழுது, மாணவர்கள் அல்லது இளைஞர்களுக்கு மிக சிறிய அளவிலான பயன்களே கிடைக்கின்றன. 

இவ்வாறு அரசு சாரா இயக்கங்கள் மக்களுக்காகச் செயல்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் வேளையில் அந்த அரசு சாரா இயக்கங்களுக்கே உதவிகள் தேவைப்படும் கவலையான நிலையும் உள்ளது. 

இதன் மூலம், அரசு சாரா இயக்கங்கள் அதிகரிப்பது ஒரு பொருட்டல்ல. அதனால், நாட்டு மக்களுக்கும் இந்தியர்களின் மேம்பாட்டிற்கும் எத்தகைய மாற்றம் ஏற்படுகிறது என்பது தான் முக்கியம். 

அரசு சாரா இயக்கங்களில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அல்லது உறுப்பினர்கள் அனைவரும் இந்தியர்களின் வளர்ச்சிக்கு வித்திடும் நோக்கில் செயல்பட்டால் எதிர்காலத்தில் இது போன்ற கேள்விகள் தவிர்க்கப்படலாம். 