ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம்!சாதகமா? பாதகமா?

பினாங்கு, ஜன. 7-
தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பினாங்கு வாழ் பொது மக்கள் தங்களின் கருத்தைத் தெரிவித்தனர்.பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்துக்களின் சமூகப்,பொருளாதார வளர்ச்சிக்கு உரியச் சேவைதனை ஆற்றி வருகிறது.


அதில் இந்திய மாணவர்களுக்கான கல்வி நிதி,ஏழ்மையில் உள்ள வரிய மக்களுக்கான உதவிகளை நிறையவே செய்து வந்துள்ளது என செபராங் பிறை,புக்கிட் தெங்காவை சேர்ந்த கோவிந்தசாமி பெருமாள் தெரிவித்தார்.இதனிடையே இந்து அறப்பணி வாரியம் தேசிய ஒற்றிமைத்துறை அமைச்சின் கீழ் செயல்பட்டால்,அதன் நிர்வாகம் சொத்துடமை யாவும் ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுமா ? என கோவிந்தசாமி பெருமாள் கேள்வி எழுப்பினார்.பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தனி வருமானம் பெரும் வாரியம்,அவை இந்துக்களுக்குத் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது,இதனைத் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் செயல்படுவதால் அந்த அமைச்சிடமிருந்து நிதி உதவி வழங்கப்படுமா என்றும் கோவிந்தசாமி பெருமாள் வினவினார்.

இந்து அறப்பணி வாரியத்தைத் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் என மதானி அரசாங்கம் தெரிவித்துள்ளது,பினாங்கு மாநிலத்தில் சிறப்பாகச் செயல்படும் வாரியம் நாடு முழுவதும் அமைக்கப்பட வேண்டும் அதன் மூலமாக நாட்டில் உள்ள இந்துக்களுக்கு உடனடி தேவைகளுக்குத் தேசிய ஒற்றுமைத்துறைஙஅமைச்சு நடவடிக்கை எடுக்க முடியுமென செபராங் பிறை தென் மாவட்டம்,சிம்பாங் அம்பாட்டை சேர்ந்த திருமதி மாலா முனியாண்டி கருத்துரைத்தார்.

இந்து அறப்பணி வாரியம் மித்ரா தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் இயங்குமென அமைச்சர் டத்தோ ஆருண் ஆகோ டகாங் தெரிவித்திருந்தார்,இதனை ஆதரிப்பதாகத் தெரிவித்த பெர்மாத்தாங் திங்கியை சேர் செல்வா சுப்பிரமணியம் இதன் மூலம் மித்ரா,இந்து அறப்பணி வாரியம் ஆகவே கண்கனிக்கபடுவதன் மூலமாக சமூக,கல்வி பொருளாதார உதவிகள் தேவைப்படுவோருக்கு உதவிகள் விரைந்து கிடைக்க வாய்ப்பாக அமையும் என்று அவர் கருத்துரைத்தார்.

பெர்மாத்தாங் பாவ்வை சேர்ந்த எஸ்.கோவலழகன் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது ஒரு நல்ல முடிவு இல்லை என்றும்,இதனால் வரையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கணக்குகள் யாவும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு அனுப்பி வந்துள்ளது,இதனால் வாரியத்தின் செயல்பாடுகள் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு செல்லும் என்பதுடன்,தற்பொழுது ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் இருப்பது ஏற்புடையதில்லை என்றார் அவர்.

பிறையை சேர்ந்த தேவகுமாரன் எஸ்.பி.தேவன் குறிப்பிடுகையில்,பினாங்கு மாநில அரசாங்கத்தின் கிழ் இந்து அறப்பணி வாரியம் செயல்படுவது சாலச்சிறந்த்து என கருத்துரைத்தார்.வாரியத்தின் கணக்குகள் யாவும் நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது,இதற்க்கு முன்னர் மனித வள அமைச்சின் கீழ் வாரியம் இருந்தது.வாரியத்தின் மூலமாக சிறப்பான நிர்வாகதையும் நம்பகத்தன்மை மூலமாக மக்களுக்கு சேவையாற்றுவது அவசியம் என தெரிவித்தார் தேவகுமாரன்.
இதனிடையே பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது தமக்கு அதிர்ச்சி அளிக்கிறது என பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ குவான் இயோவ் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் எவ்வித தகவல்களை மாநில அரசாங்கத்திடம் தெரிவிக்கவில்லை என செய்தியாளர் சந்திப்பில் சௌ தெரிவித்தார்.நூற்றாண்டு பழமை வாய்ந்த பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது இதற்கான காரணத்தை ஒற்றுமைத்துறை அமைச்சிடமிருந்து பெற மாநில அரசு காத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவர் ஆர்.எஸ் ராயர் தமது கருத்தாகத் தேசிய ஒற்றுமைத்துறை கீழ் வாரியம் இருப்பதால் அமைச்சிடமிருந்து வாரியத்தின் வளர்ச்சிக்கு மேலும் பல நிதி உதவிகள் கிடைக்பெறும் என எதிர்பார்க்கப்படும் என்பதுடன்,பினாங்கு மாநில அரசாங்கத்தின் நேரடி பார்வையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் செயல்படும் எனவும் தெரிவித்தார்.
இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ப.இராமசாமி தமது கருத்தாகத் தேசிய ஓற்றுமைத்துறையின் கீழ் இந்து அறப்பணி வாரியம் இயங்குமெனத் தெரிவித்துள்ளது நிலையில்,அதன் ஆணையர்களை மாநில அரசாங்கம் தேர்வு செய்ய வேண்டுமென்று கருத்துரைத்தார்.

இதனால் வரை நாடாளுமன்றத்தின் பார்வைக்கு இந்து அறப்பணி வாரியத்தின் கணக்குகள் அனுப்பி வைக்கப்படு வருகிறது,தாம் தலைவராக இருந்த போது மனித வள அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வைக்கப்பட்டது என்றார் அவர்.அங்கிலேயர் ஆச்சியின் போது 1906 ஆம் ஆண்டு பினாங்கு,மலாக்கா,சிங்கப்பூர் ஆகியவற்றில் இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படாது என்றும்,பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் பினாங்கு தீவு மற்றும் செபராங் பிறை மாவட்டங்களில் 13 ஆலயங்கள் அறப்பணி வாரியத்தின் கீழ் செயல்படுவதாக பேராசிரியர் ப.இராமசாமி விவரித்தார்.