நடப்புத் திட்டங்கள் குறித்து மாதாந்திர அறிக்கைகள் வழங்க வேண்டும்! – பிரதமர் வலியுறுத்து!

அரசு நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளின்  துறைத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள்  நடப்புத் திட்டங்கள் குறித்து மாதாந்திர அறிக்கைகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற பிரதமர் துறையின் ஊழியர்கள் உடனான மாதாந்திர கூட்டத்தில்  இதனைத் தெரிவித்த அன்வார், அறிக்கையை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சுகி அலியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

 என்ன நடந்தது என்பதற்கான மாதாந்திர அறிக்கை இருக்க வேண்டும். திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முயற்சியில் அரசு ஊழியர்கள் என்ன பங்களித்திருக்கிறார்கள் என்பது தெரிய வேண்டும் என அன்வார் கேட்டுக்கொண்டார்!