மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் – தற்காலிகமாக மூடப்படுகிறது!
மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, இன்று தொடங்கி அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஆலய நிர்வாகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனை ஆலய நிர்வாகம் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிரசித்தி பெற்ற திருத்தலமான இவ்வாலயத்திற்கு இம்மாதத்தில்தான் பக்த பெருமக்கள் அதிக அளவில் பாதயாத்திரை செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!