வெள்ளத்தில் ஜொகூர்… அபாயகரமான அளவில் 6 ஆறுகள்!

வெள்ளத்தில் ஜொகூர்… அபாயகரமான அளவில் 6 ஆறுகள்!

ஜொகூரில் தொடர்ந்து வெள்ள நிலைமை மோசமடைந்து வருகிறது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 3,322 பேருடன் ஒப்பிடும்போது, இன்று காலை 8 மணி நிலவரப்படி 6,564 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தா திங்கி, குளுவாங் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளில் இருந்து அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் அஸ்மி ரோஹானி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஆறு மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 1,819 குடும்பங்கள் 51 PPS க்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், கோத்தா திங்கியில் அதிகபட்சமாக 783 குடும்பங்களைச் சேர்ந்த 2,964 பேர் 24 PPS களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், ஜோகூர் பாருவில் (504 குடும்பங்களைச் சேர்ந்த 1,844 பேர்) 10 PPS மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்,  மற்றும்  குளுவாங்கில் 14 PPS மையங்களில் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,633 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜொகூர் மாநிலச் செயலாளருமான அஸ்மி, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் (டிஐடி) தரவுகளின் அடிப்படையில், ஜோகூரில் உள்ள ஆறு ஆறுகளில் நீர் அபாயகரமான அளவில் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.

மெர்சிங் மற்றும் தங்காக்கில் மழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களில் வெயில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!