இன்ஸ்பெக்டர் குனேஸ் ராவ் மாரடைப்பால் மரணம்

பினாங்கு போலீஸ் குற்றப்புலனாய்வுத் துறையின் இன்ஸ்பெக்டர் குனேஸ் ராவ் உறுதி மொழி எடுக்கும் விழாவிற்கு பின் மயங்கி விழுந்த மரணமடைந்தார்.
இதனை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சின் உறுதிப்படுத்தினார்.

35 வயதான குனேஸ்ராவ் பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் டி9 எனப்படும் தீவிர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாவார்.இவர் மாநில குற்றப் புலனாய்வுத் துறை ஏற்பாடு செய்திருந்த போதைப்பொருள், ஊழல் உறுதிமொழி வாசிப்பு விழாவில் பங்கேற்றார்.அந்நிகழ்வுக்கு பின் அவர் கழிப்பறையில் மயங்கி கிடக்க காணப்பட்டார். மாரடைப்பால் அவர் மரணமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.