GLC – GLIC இரண்டும் மலேசியப் பொருளாதாரத்தை நகர்த்தும் சக்திகள்! – அன்வார்
அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட glc நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டglic முதலீட்டு நிறுவனங்கள் லாபத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல், தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வலியுறுத்தினார்.
“முன்னோக்கிச் செல்லும்போது, GLICகள் மற்றும் GLCக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை நிதி அமைச்சு ஒருங்கிணைக்கும் என்று கூறினார்.
மேலும், மாதாந்திர கூட்டங்களில் கலந்துகொள்ள ஜிஎல்சி மற்றும் ஜிஎல்ஐசிக்களும் அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மதானியின் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதில் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்கைக் கருத்தில் கொண்டு அவர்கள் அழைக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
GLC கள் மற்றும் GLIC கள் பணியாளர் நலனை மேம்படுத்தவும், பட்டதாரி வேலைவாய்ப்பு திட்டங்கள் உட்பட மனித மூலதன வளர்ச்சியை ஆதரிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜிஎல்ஐசிகள் ஆதரவு அளிக்க வேண்டும் மற்றும் நேரடி உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.
கிட்டத்தட்ட RM 2 டிரில்லியன் சொத்து மதிப்பை நிர்வகிக்கும் GLICகளின் கூட்டுப் பங்கு, மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க உகந்ததாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
GLIC கள் தங்கள் உள்நாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறிய பிரதமர், பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வருவாயை விரிவுபடுத்துவதில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருப்பதாகக் கூறினார்.
நிர்வாகத்தின் கீழ் RM1.84 டிரில்லியன் மதிப்புடைய சொத்துகள், கடந்த ஆண்டு மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவிற்கு கிட்டத்தட்ட சமமாக இருந்ததால், GLICகள் மலேசியாவின் பொருளாதாரத்தை நகர்த்துவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் திறன் கொண்டவை என்று அவர் கூறினார்!