UMS மாணவர்கள் போராட்டம்! அன்வார் உடனடி தீர்வு.
கடந்த கோவிட் தொற்றுக்குப் பின் பல்கலைக்கழகங்கள் இயல்பாகச் செயல்பட தொடங்கி 2 ஆண்டுகளாகிய நிலையில் சபா பல்கலைக்கழகத்தில் நீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கோவிட் காலத்தில் நீர் மேலாண்மை வாரியம் முறையாக நீர் வழி குழாய்களைப் பராமரிக்காமல் விட்டது தான் காரணம் என எழுந்த சர்ச்சையில் நீர் வழித்தளங்களையும் நீர் குழாய்கள் சீரமைக்கவும் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 3 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது.
1056அதிகாரிகளும் ஏறத்தாழ 15000 மாணவர்கள் இந்த நீர் தட்டுப்பாட்டால் கடந்த 2 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமராக அன்வார் தலைமையேற்றது, 3 மில்லியன் நிதியைச் சபா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டை நிவர்த்திச் செய்வதற்காக வழங்கினார். ஆனால் நிதி பெற்று ஓராண்டைக் கடந்த நிலையில் இன்னும் நீர் தட்டுப்பாட்டுக்கான தீர்வு கிடைக்காமல் இருந்ததால் சபா பல்கலைக்கழ்க மாணவர்கள் நேற்று சபா பல்கலைக்கழக வளாகத்தில் KKTF பகுதியில் எங்களுக்குத் தண்ணீர் வேண்டும் எனும் பதாகைகளுடன் மறியலில் ஈடுபட்டனர்.
பலமுறை நீர் தட்டுப்பாடு தொடர்பாக பல்கலைக்கழகத்திடம் மனு வழங்கியும் எந்தவொரு நிலையிலும் முறையான பதில் இல்லாததால் போராட்டத்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர் சபா பல்கலைக்கழக மாணவர்கள்.
இன்று உயர்க்கல்வி அமைச்சர் Zambry Abdul Kadir சபா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிக்கு வருவதை அறிந்த மாணவர்கள் பதாகைகளைக் கொண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இப்போராட்டம் குறித்து பிரதமர் அன்வாருக்குத் தகவல் தெரிவித்துள்ள சிறப்பு உளவுக் கண்காணிப்புப் படை, உடனடியாக அம்மாணவர்களைச் சந்தித்து போராட்டத்திற்கான நோக்கத்தைக் கேட்டு தீர்வு வழங்கும்படி உயர்கல்வி அமைச்சர் Zambry Abdul Kadir ஐ பிரதமர் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் அறிவுருத்தலில் மாணவர்களைச் சந்தித்த உயர்கல்வி அமைச்சர் Zambry Abdul Kadir மாணவர்கள் தரப்பில் உள்ள நியாயத்தைப் பிரதமருக்கு எடுத்துரைத்ததும் பிரதமர் அன்வார் உடனடியாக நீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய 2 மில்லியன் நிதியை ஒதுக்கும்படி ஆணையிட்டார்.
கடந்தாண்டு மே மாதம் பெறப்பட்ட 3 மில்லியன் நிதி குறித்து உடனடியாகச் செயல்திட்ட அறிக்கையை வழங்கும்படி பிரதமர் அன்வார் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின் நோக்கம் உன்னதமானதாகவும், உண்மையானதாகவும், நேர்மையானதாகவும் இருந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேவையானதைச் செய்வதற்குத் தான் அரசாங்கம் இருக்கிறது. போராட்டம் செய்த மாணவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பல்கலைக்கழ்க நிர்வாகத்தை உயர்க்கல்வி அமைச்சரும் பிரதமரும் கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#ums #pelajar #isu #air #sabah #universiti #mahasiswaums #mahasiswa #சபா #பல்கலைக்கழகம்