எஸ்.எம்.இ கோர்ப்பின் மேம்பாட்டிற்குப் மலேசிய தொழில்முணைவோர் மேம்பாட்டு அமைச்சகம் ஒத்துழைக்கும்

கோலாலம்பூர், ஜன. 10 –
எஸ்.எம்.பி கோர்ப் ஏற்பாட்டில் பிளாட்டினம் சென்ட்ரல், கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய தொழில்முணைவோர் மேம்பாட்டு அமைச்சினரோடு நிகழ்ந்த சந்திப்பில்டத்தோ ரமணன் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டார்.
எஸ்.எம்.இ கோர்பானது ஏராளமான செயல்திட்டத்தையும் வழிவகைகளையும் 2024இல் தொழில்முனைவோருக்குத் திரளாக திரட்டியுள்ளது என்று டத்தோ ரமணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். எஸ்.எம்.இ கோர்ப்பின் செயல்திட்டங்களாக, கடனுதவி, வர்த்தக உரிமம், திறன்படும் வர்த்தக மேம்பாடு, பீப் எனும் இஸ்லாமிய வர்த்தக மேம்பாட்டு திட்டம், ஜிஇபி எனும் வெளிதொடர்பு ஏற்றுமதி இறக்குமதி மேம்பாடு, அவுட்டோ டிஜிட்டல் முதன்மை மேலாக்கம்முதலிய திட்டங்கள் இடம்பெறுகின்றன என்று அவர் தெரிவித்தார். இத்திட்டத்தில் குறிப்பாக, 50 பிகேஎன்எஸ் ஊழியருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழாவும் நிகழவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு வர்த்தக ரீதியில் நேர்மறையான காலாண்டாக இடம்பெற்றுள்ளது. சுமாராக, 22 ஆயிரத்திற்கும் மேலான தொழில்முணைவோருக்கு எஸ்.எம்.இ கோர்ப் உதவியுள்ளது. மைக்ரோ மடானி ஒருங்கிணைப்பிலும் இவ்வுதவி தொழில்முனைவோருக்கு கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவ்வாண்டு போன காலாண்டை விட குறைவான எண்ணிக்கையில் உள்ளது. இருப்பினும், எஸ்.எம். இ கோர்ப் தலைவர் தனக்கு வாக்களித்துள்ளார் என்று டத்தோ தெரிவித்தார்.

மேலும், இவ்வளாகத்தில் பல தொழில் முணைவோர் சாதனை படைத்து திகழ்கின்றனர். ஏஐ பயன்பாடு, மருத்துவ சிகிச்சை நிபுணத்துவம், உடல் ஆரோக்கியம் சார்ந்த துறைகள், போன்றவற்றில் சாதனையிட்டுள்ளனர். சான்றாக, செம்பனை எண்ணெயில் சவர்க்காரம், எண்ணெயை மட்டும் கிடைக்கும் என்று எண்ணிகொண்டிருக்கையில் அச்செம்பனை எண்ணெய் வைத்தே பலவகையான பொருட்களை வர்த்தக மேம்பாட்டில் பயன்படுத்திய தொழில்முணைவோரும் இங்குள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

நமது சமூதாயத்தில் பெரும்பாலானோர் வர்த்தக துறையில் சிறப்புடன் காணப்ப்டுகின்றனர். பலர், தொழில்துறை பயிற்சிகள், வகுப்புகள், மேம்பாட்டு பட்டறைகள் என பல துறைசார் வல்லுநர் பயிற்சிகளையும் வர்த்தக திறனையும் ஹாங் காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் இயக்கி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

1010 நிறுவனங்கள் வர்த்தக நிறுவனத்தில் பதிவாக்கியுள்ளனர். அதில், 60 நிறுவனங்கள் எஸ்.எம்.இ கோர்ப்பின் துணைக்கொண்டு பதிவானது என்பதை குறிப்பிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற, பல உதவிகளை எஸ்.எம்.இ கோர்ப் நிகழ்த்திகொண்டு வருவதில் ஆர்வமுள்ளோர் கலந்து பயனடைவீர். இதில், பாதகமும் சாதகமும் இன்றி தகுதியுள்ளவர்களுக்குச் செரிவான அறிக்கைகள் இருப்பின் நிச்சயமாக உதவிகள் கிடைக்கும் என்று டத்தோ தெரிவித்தார்.
தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டில், ஏராளமான நேர்மறையான விடயங்களை எஸ்.எம்.இ கோர்ப் மலேசியா அடைந்துள்ளது. இவ்வெற்றியை மட்டும் கொண்டாடாமல், புதிய பரிமாணத்தில் பல செயல்திட்டங்களும் முன்னெடுப்புகளும் 2024ஆம் ஆண்டில் தொழில்முணைவோரின் வளர்ச்சியையும் மலேசியாவின் வர்த்தக, பொருளாதார நிலையையும் மேம்படுத்த உதவும் என பெரிதும் எதிர்பார்பதாக எஸ்.எம்.இ கோர்ப் மலேசியாவின் ஒருங்கிணைப்பாளரும், தலைவருமான ரிசால் பின் நானி செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இதற்கிடையில், இச்சிறப்புச் சந்திப்பிற்கு வருகையளித்து பக்கபலமாகவும் செயல்திட்டத்திற்கு துணைப்புரியும் மலேசிய தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சர் டத்தோ ரமணனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.