லோவின் குழந்தைகளை இஸ்லாமிய மதமாற்றம் செய்தது செல்லாது: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர்,ஜன.10-
மதம் மாறிய மூன்றுக் குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக முஸ்லீம் மதத்திற்கு மாற்றியதை ரத்து செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஏகமனதாகத் தீர்பளித்தது.தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங்கின் மூன்று பிள்ளைகளும் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறியது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது மேல்முறையீட்டு நீதிமன்றம்.கடந்த 2020ஆம் ஆண்டு லோவின் முன்னாள் கணவரான முஹம்மத் நகாஷ்வரன் தமது மூன்று பிள்

ளைகளையும் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்பது குறிப்பிடத்தகது.
மூன்று நீதிபதி கொண்ட அமர்விற்கு தலைமையேற்ற நீதபதி ஹடாரியா சையத் இஸ்மாயில், இந்த தீர்ப்பினை அளித்தார். மேலும், மதம் மாற்றுவது என்பது அரசியலமைப்பு சட்டத்துடன் செல்லாது என்று நீதிபதி தெரிவித்தார்.