தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சுடன் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சந்திப்பு

  கோலாலம்பூர்,  ஜன. 18- 

பல்வேறு திட்டங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக பினாங்கு இந்து அறப்பணி வாரியமும்,தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சும் நல்லெண்ண சந்திப்பு ஒன்றை நடத்தின.அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில்,அறப்பணி வாரியத்தின் எதிர்கால திட்டங்கள்,கல்வி,சமூக நலன் சுகாதாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர்.அருணாசலம் தெரிவித்தார்.


எங்களின் நல திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து ஆதரவும்,உதவியும் கிடைக்குமென நம்பிக்கைக் கொண்டுள்ளதாக சொன்னார்.தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ அரோன் அகோ டகாங் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோருடன் நடைபெற்ற இந்த சந்திப்பு எங்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்தது என்றார்.


இந்த மரியாதை நல்லெண்ண சந்திப்பில்,பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என் ராயர்,துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர்.அருணாசலம், செயலாளர் டாக்டர் விஷாந்தினி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.