மன்னிப்பு உணர்ச்சியின் வெளிப்பாடா? சொல்லா? அல்லது தமிழனின் ஏமாறும் தன்மையின் மூடதனமா?
(யோகராஜன் ஜேம்ஸ், சர்வேந்திரன் சந்தர்)
பெட்டாலிங் ஜெயா, ஜன. 18 –
மலேசியாவில் தமிழ்ச் சமூகத்தினரை சாடி பற்பல சர்ச்சைகள் தொடர்ந்து பரவி வருகிறது. தலைமையில் உள்ளாரும் அல்லாரும் பலவிதமாக தமிழ்ச் சமுகத்தைப் பற்றி பேசியுள்ளனர். வெளியிட்ட கருத்துகள் தவறு என்று தெரிந்தும் தமிழினம் அதனை ஏற்காமலிருப்பதால் வார்த்தை வழியாக மன்னிப்பு கேட்கும் பழக்கம் அதிகம் அதிகரித்து வருகிறது.
அண்மையில், நமது நாட்டின் முன்னாள் பிரதமர் வெளியிட்ட கருத்தினைப் பற்றி நன்கு அறிவோம். அவரின் தவறான கருத்தை நாம் ஏற்காமலிருப்பதினால் அவர் கேட்கும் ஒரு மன்னிப்பினால் நாம் அடங்கிவிடுவோமா? இது தொடராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?பெட்டாலிங் ஜெயா, எல்எப்எஸ் ஸ்டேட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நபர் சிகாமாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான, யுனேஸ்வரிடம் கேள்வி எழுப்பினார்.
அரசியல் கருத்து வேற்பாடுகள் கொண்ட இவ்வரங்கில் முதலில் அரசு விகிதமாக எழுப்பியுள்ள இந்த கேள்விக்கு யாரும் மனம் நொந்துக்கொள்ளக் கூடாது.
முன்னாள் பிரதமரான துன் டாக்டர் மகாதீர் கருத்துரைத்த தகவல் நிச்சயமாக முதிர்ச்சியடைந்த பதிலாகக் கருதுவதில்லை. இதற்கு ஏராளமான கண்டனங்கள் எழுப்பப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் எழுப்பிய தகவலானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாக கருதுவது திண்ணம் என்றும் ஒரு குடிமகனின் குடியுரிமையைப் பற்றி கேள்வியுறும் போது அதில் பெருமளவு கவனம் இருக்க வேண்டிய அவசியம் உண்டு என்றும் சிகாமாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான யுனேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும், துன் எனும் அடிப்படையில் அவர் மீது சுமார் 15, 16 புகார்கள் 24 மணி நேரத்தில் காவல்துறையினரிடையே சமர்பிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் கூறினார்.
தாங்கள் கூறுவது போல, செய்வதை செய்துவிட்டு மன்னிப்பு என்றால் அது எல்லாவற்றையும் சரி செய்து விடாது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினாராக நானும், பினாஸ், தொலைத்தொடர்பு தொழிலுட்ப துறை அமைச்சர், பாமி பாட்சில் ஆகியோர் கண்டிப்பாக இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமலிருக்க கண்காணிப்போம்.
வரும் காலங்களில், அரசாங்கத்தின் செயல்பாட்டில் இத்தகைய சொல் பயன்பாடுகள் முற்றிலும் இல்லாமல் இருக்க அரசாங்கம் நிச்சயமாக கடைப்பிடிக்கும் என நம்புவதாக யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.
குடிமகனாக எல்லாருக்கும் இந்த நாட்டின் மீது மதிப்பும் மரியாதையும் இருப்பது மெய்யே. மலேசியா பல்லினம் வாழும் நாடாக இருப்பதால் இதுப்போன்ற வண்மமுள்ள வார்த்தைகள் ஒதுக்கப்படவேண்டியது சாலச் சிறந்தது.
நம் நாட்டில், இனம், மதம் சார்ந்த அரசியல் நடந்து வருவது ஒன்றும் புதியது அல்ல, காலம் காலமாக பின்பற்றிவருவதாக இருப்பது யாவரும் அறிந்ததொன்றே. அவற்றில், அதிகம் பாதிப்படைவது இந்தியச் சமூகம் என்றால் கிஞ்சிற்றும் ஐயமில்லை. அதற்காகவே, இது போன்ற நடவடிக்கைகள், நிகழ்வுகள் நமது அடையாளத்தை நெரிப்படுத்தியும் ஒழுங்குப்படுத்தியும் நிலைத்து நிற்கச்செய்யும்.
என்னாதான் நான் அரசு சார்ந்து இருந்தாலும், நானும் ஒரு சக குடிமகனே. எனக்கும் அரசின் மேல் கேள்வி உள்ளது. இருந்தாலும், நான் வகிக்கும் பதவி சில கேள்விகளைக் கேட்காமலிருக்க அமைகிறது. அதுப்போலவே, பேசப்படும் விசியங்களைப் பேசவேண்டும். தவிர்க்கப்படவேண்டியவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஆகவே, கருத்தினை நிலைப்படுத்தி தெரிவிப்பதில் தங்கு தடையின்றி வெளிப்படுத்த வாய்த்த வாய்ப்புக்கு நன்றியை சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் தெரிவித்தார்.