மலேசிய மக்கள் நல சேவைக் கழகத்தின் கல்விப் பணி

கிள்ளான், ஜன. 18-
மலேசிய மக்கள் நல சேவைக் கழகம் நம் மலேசியா வாழ் இந்தியர்களுக்குப் பல வகைகளில் உதவி வருகின்றது. அதன் வழி கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதியும், சென்ற வாரம் ஜனவரி 13ஆம் தேதியும் கிள்ளான் பண்டார் பொட்டானிக்கில் அமைந்துள்ள டிவா அந்நிய செலாவணி பயிற்சி மையத்தில், கிள்ளான் வட்டாரத்தில் பயிலும் சுமார் 110 இந்திய மாணவர்களுக்கு எஸ்.பி.எம் தேர்வு வழிகாட்டி பட்டறையை மலாய், ஆங்கிலம், கணிதம், சரித்திரம், தமிழ்மொழி ஆகிய பாடங்களுக்குப் பிரத்தியேகமாக நடத்தியது.


பொதுமக்கள் மற்றும் ஓம்ஸ் அறவாரியத்தின் உதவியோடு இந்நிகழ்வினைச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும், மாணவர்கள் பயனடையும் வகையிலும் தலை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தியதாக கழகத்தின் தலைவர்கந்தன் சாமிநாதன் கூறினார்.


ஓம்ஸ் அறவரியத்தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் 2 பட்டறைகளிலும் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் நிதியுதவியும் அளித்து இந்நிகழ்வினை வெற்றி பெறச் செய்தார் என மகிழ்வோடு கூறினார். இக்கழக பொறுப்பாளர்களும் அவர்தம் குழுவினருக்கும் கழகத்தின் சார்பில் நன்றி கூறினர்.