ஒம்ஸ் பா.தியாகராஜன் தலைமையில் 150 வயலின் கலைஞர்களுக்குப் பட்டமளிப்பு விழா

சிலாங்கூரின் பிரபல வயலின் கலைக்கழகமான ஸ்ரீ ராகவேந்திரா ஆர்ட்ஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழா ஓம்ஸ் அறவாரியத்தின் நிறுவனரும் மலேசிய அரிமா சங்கத்தின் தலைவருமான ஒம்ஸ் பா. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

கடந்த 8 ஆண்டுகளாகச் சிறப்பாக இசைத்துறையில் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ள ஸ்ரீ ராகவேந்திரா ஆர்ட்ஸ் அகாடமியின் தோற்றுநர் மாஸ்டர் விக்ரம் பிரபாகர் தற்போது மலேசியச் சாதனையாளர் புத்தகத்திலும் தடம் பதித்துள்ளார்.

இந்நிகழ்ச்சி கலை, கலாச்சாரம் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது மட்டுமின்றி வயலின் இசைக்கருவியை முறையாகப் பயின்ற 150 மாணவர்களுக்குத் தரச் சான்றிதழுடன் பட்டமளிப்பும் வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.

முன்னதாகப் பினாங்கு தண்ணீர் மலை கோயில், ஈப்போ கல்லுமலை கோயில், பண்டார் சன்வே ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில், பிரிக்பீல்ட்ஸ் கந்தசாமி கோயில், பத்துமலை குகை சுப்பிரமணியர் கோயில் போன்ற ஆலயங்களில் சமயம் சார்ந்த பல்வேறு படைப்புகளை ஸ்ரீ ராகவேந்திரா ஆர்ட்ஸ் அகாடமியின் கலைஞர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

இசையும் கலையும் இணைந்து நிகழ்ச்சி நடைபெற்றது அனைவரின் ஆதரவையும் பெற்றது.