விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது… கண்கலங்கிய மாமன்னர்!

மாமன்னர், சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா தனது பதவிக் காலம் நிறைவடைந்ததையொட்டி நேற்று இரவு விருந்துபசரிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த சிறப்பு நிகழ்வில் பேசிய மாமன்னர்  கண்கலங்கியது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தன்னை மன்னராகவும், தமது துணைவியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவை ராஜா பெர்மைசூரி அகோங்காகவும் ஏற்றுக்கொண்ட அனைத்து மலேசியர்களுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு பிரிவு இருக்க வேண்டும். எனவே, நானும் ராஜா பெர்மைசூரி அகோங்கும் பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த நம்பிக்கையை என்னால் இயன்றவரை நிறைவேற்றியதால், சோகம், மகிழ்ச்சி மற்றும் நன்றியுணர்வு கலந்த உணர்வுகளுடன் நான் பகாங்கிற்குப் புறப்படுவேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த  2019, ஜனவரி 24ல் நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டின் சிறப்புக் கூட்டத்தில் 16ஆவது மாமன்னராக சுல்தான் சுல்தான் அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019, ஜனவரி 31ல் மாமன்னராக  அரியணையில் அமர்ந்தார்!