இந்திய தூதரகத்தின் 75-ஆவது இந்திய குடியரசுத் தின விழா கொண்டாட்டம்
லாவண்யா ரவிச்சந்திரன்
இஷாந்தினி தமிழரசன்
படங்கள்: எம்.முருகன்
கோலாலம்பூர், ஜன.31-
இந்தியாவின் 75-ஆம் ஆண்டு குடியரசுத் தினக் விழா பல நாட்டிலுள்ள அதிகாரிகளையும் பிரமுகர்களையும் ஒன்றிணைத்து கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் குடியரசுத் தின விழா கொண்டாட்டத்திற்கு மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி அனைவரையும் வரவேற்று நன்றி தெரிவித்தார்.
உலகில் உள்ள பல நாடுகளில் 1.4 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு புகழ்பெற்ற நாடாக இந்தியா திகழ்கிறது. நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கும் சரிவர கொண்டுச் செல்வதற்கு இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மிக உறுதுணையான இருந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு அனைவரின் பார்வையில் மிக அரிதான ஒன்றாக திகழ்வதை நாம் அறிய வேண்டும். பல சவால்களுக்கு இடையே நாடும் நாட்டு மக்களும் போராட்டக் குணத்தைக் கொண்டு தைரியமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
10 வருட காலக் கட்டத்தில் இந்தியா பொருளாதார துறையில் பல்வேறு வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தக் காலத்தில் பத்தாவது பெரிய பொருளாதார மேம்பாடு அடைந்து முன்னணி வகிக்கிறது. அதோடு, இன்னும் 4 வருடங்களில், 2027 ஆம் ஆண்டில் பொருளாதாரத் துறையில் 3-ஆவது இடத்தை இந்தியா வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.ஜனவரி மாதத்தில் இந்தியா உலகச் சந்தையில் 4.33 டிரில்லியன் அமெரிக்க டாலர் எனும் சாதனையைப் புரிந்துள்ளது. அதிலும் குறிப்பாக, 250 மில்லியன் மக்கள் பரிணாம வளர்ச்சியில் வறுமையிலிருந்து விடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், இந்திய நிலாப்பயண சந்திரயான் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வெற்றி ஆசியா நாடுகளின் வெற்றியாகும் என்று மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியதையும் அவர் தனதுரையில் சுட்டிக் காட்டினார்.இலக்குமுறை மாற்றத்திற்கு ஏற்ப பொருளாதார நிலையில் இந்தியா அடைவு கண்டுள்ளது இந்தியாவின் சிறந்த வெற்றிகளில் ஒன்றாகும். உலகிலேயே 111 தொழில்நுட்ப கருவிகளைத் தயாரித்து, உலகில் 3-ஆவது இடத்தை மலேசியா வகிக்கிறது.
இவ்வாறு 7 ஆண்டுகளில் அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் இந்தியா பட்டதாரிகளை உருவாக்குவதில் மேம்பட்டுள்ளது. உலகளாவிய தொழில்துறை வேலை நிபுணத்துவத்தில் உள்ளவர்கள் 25 விழுக்காடு முன்னேற்றம் அடைந்துள்ளது. இவை அனைத்தும் நிலையான் ஓர் உருமாற்றமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலக்குமுறை மாற்றத்தோடு, அனைத்துலக அளவில் தனியார் துறைகளிலும் பொதுத் துறைகளிலும் வெற்றி கண்டுள்ளது. மற்ற நாடுகளைப் பொறுத்தவரையில் இந்தியாவுடனான இந்தக் கருத்து பரிமாற்றம் அல்லது செயல்முறை பரிமாற்றங்கள் நம்பிக்கைகுரியதாக அமைகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
மலேசியாவுடனான இந்த ஒப்பந்தமும் தொடர்பும் ஆர்வத்தின் அடிப்படையில் மட்டும் இல்லாமல் மலேசிய வளங்களின் மதிப்பு, அரசியலமைப்பு\திட்டங்கள், ஜனநாயகத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
மலேசியாவின் நிலையான அரசாங்கம், பிரதமரின் சிறந்த தலைமைத்துவம் ஆகியவை 2024 ஆம் ஆண்டில் மலேசிய இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மலேசிய பிரதமரின் தலைமை பொறுப்பிலான ஆட்சியில் அதிகமாக வளர்ச்சியைக் கொண்டு வரும் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சியில் இரண்டு சாராரின் கடமையும் மிக முக்கியம் என்பதால் இனி வரும் காலங்களில் இந்தத் தொடர்பு மேலும் பெருகும். எல்லாத் துறைகளிலும் இந்திய நாட்டினர் மலேசியாவில் ஈடுபடுவதற்கும் அவர்களுக்கான அனைத்து சலுகைகளும் தரப்படுவது குறித்து அவர் தனது நல்வாழ்த்தையும் தெரிவித்தார்.
மலேசியாவில் சுமார் 200 நிறுவனங்கள் இந்தியர்களால் நிறுவப்பட்டு நல்ல் முறையில் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. தரமான வேலை வாய்ப்புகளும் மலேசியாவில் கிடைக்கும் என்ற உறுதியையும் மலேசிய இந்திய தூதரான அவர் தெரிவித்தார்.மலேசியாவுடனான இந்தியாவின் தொடர்பை இன்றளவிலும் தொடர்ந்துக் கொண்டு வரும் நிறுவன இயக்குநர்களும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆசியாவில் இந்தியாவுடனான வர்த்தக நிலையைத் தக்க வைத்துக் கொள்வதில் மலேசியா மூன்றாவது இடத்தில் இருப்பதையும் அவர் இந்தியாவின் நல்ல அடைவுநிலைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.தற்போது இந்தியா அதிநவீன முறையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டிருக்கும் நாடுகளில் முக்கிய நாடாக விளங்குகிறது.
இலக்குமுறை துறையிலும் தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலுமே மலேசியாவுடனான இந்த் உறவு இந்தியாவிற்கு முக்கியம் என அவர் தெரிவித்துக் கொண்டார்.புது இந்தியாவாகவும் மடானி மலேசியாவும் சேர்ந்து இதற்கு முன்னர் இருந்ததை விட நல்ல நட்புறவு கொண்ட நாடாக விளங்கி மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும். 2047 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றம் கண்ட நாடாக விளங்க வேண்டும் என்பதே இந்தியாவின் குறிக்கோள் என இந்தியாவின் 14-ஆவது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக மலேசிய இந்திய தூதர் பி.என்.ரெட்டி தெரிவித்தார்.
இவ்விழாவில், மலேசிய நிதி அமைச்சர் 2 அமிர் அம்சா அசிசான், பிரதமர் துறை சட்டம் மற்றும் துறைசார் சீர்திருத்த துணை அமைச்சர் எம்.குலசேகரன், தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, துணை அமைச்சர்கள், சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன், மசிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன், மலேசிய அம்பேத்கர் இயக்கத் தலைவர் டத்தோ கே.பஞ்சமூர்த்தி, அரிமா எனப்படும் மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ முருகேசன், முன்னாள் துணை அமைச்சர் டத்தோ லோகபாலா, சட்டமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீ முருகன் நிலையத் தலைவர் டான்ஸ்ரீ எம்.தம்பிராஜா, மைக்கி தலைவர் டத்தோ என்.கோபாலகிருஷ்ணன், மலேசியாவின் தலைமைப் பாதிரியார் டத்தோ டாக்டர் கே.ஸ்ரீ தம்மாராதனா, மலேசியா பார்வையற்றோர் சங்க மாணவர்கள், மலேசியா பாரட் கழகத்தினர். கலந்து கொண்டு சிறப்பித்தனர்.