நாட்டின் 17-வது மாமன்னராக இன்று அரியணையில் அமர்கிறார், ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் இஸ்கண்டார்

ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் மலேசியாவின் 17 வது மாமன்னரக இன்று ஜனவரி 31 புதன்கிழமை பதவியேற்க உள்ளார்.

இஸ்தானா நெகாராவில் உள்ள சிம்மாசன அறையில் ஆட்சியாளர்கள் மாநாட்டின் 264 வது (சிறப்பு) கூட்டத்தில் பதவிப் பிரமாணம் செய்து, பதவிக் கருவியில் கையெழுத்திடும் விழா இன்று  நடைபெறும்.

விழாவில், பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா,   துணை மாமன்னராக பதவியேற்பார்.

மற்ற மலாய் ஆட்சியாளர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில், சுல்தான் இப்ராகிம் பதவி பிரகடன ஆவணங்களில் கையெழுத்திடுவார், அதன் உள்ளடக்கத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வாசிப்பார்.

முன்னதாக  ஜொகூரில் உள்ள இஸ்தானா புக்கிட் செரீனில் இருந்து விழாவிற்கு காலை 7.45 மணிக்கு சுல்தான் இப்ராஹிம் புறப்பட்டு, தலைநகர் ஜோகூர் பாருவில் உள்ள செனாய் சர்வதேச விமான நிலையத்தின் ராயல் ஹேங்கரில் சிறப்பு விமானத்தில் தமது பயணத்தை தொடங்கினார்!