மணப்பெண்களின் மலபார் தங்க விழா

திருமணக் கோலம் காணும் மலேசிய மணப்பெண்களைக் கொண்டாடும் வகையில் மலபார் மணப்பெண்களின் தங்க விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் மலபார் இதனை ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடி வருகின்றது. அது போல, இவ்வருடம் முதல் முறையாக மலேசியாவில் மலபார் இவ்விழாக் கொண்டாட்டத்தை தொடக்கமாக மேற்கொண்டுள்ளது என மலேசியாவில் மஸ்ஜிட் இந்தியாவில் அமைந்துள்ள மலபாரின் விற்பனை அதிகாரி மதன் தெரிவித்தார்.


மலேசியாவில், இவ்விழாவுக்கான வரவேற்பு எவ்வாறு இருக்கிறது என்பதை ஆராய்ந்து அடுத்த வருடமும் மலபார் இவ்விழாவைக் கொண்டாட திட்டமிட்டுள்ளது. அவ்வகையில், மணப்பெண்களிடம் இவ்விழா நல்ல வரவேற்பைப் பெற்றது என்றே சொல்லலாம். இதில் பங்கேற்க முன்பதிவு செய்யும் காலத்தின் போது சுமார் 300 கல்யாணம், நிச்சயம் செய்யவிருக்கும் மணப்பெண்கள் பதிந்தது இவ்விழாவின் வெற்றியாகும் என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


அத்துணை மணப்பெண்களில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 11 மணப்பெண்களை மட்டுமே தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்தார். 11 மணப்பெண்களுக்கும் 11 பிரபலமான சிகை அலங்கார ஒப்பனையாளர்களும் பங்கேற்றனர். அதோடு, எல்லா மணப்பெண்களுக்கும் வஸ்த்ராவர்ணம் சேலையும் வழங்கப்பட்டது.
மலபார் நகைக்கடையில் உள்ள நகைகளை மலேசிய மக்களுக்குத் தெரிவிப்பதே இவ்விழாவின் நோக்கமாகும். மலேசிய மக்களைப் பொறுத்தவரையில் 916 மட்டுமே தங்கமாகும். ஆனால், அதைத் தவிர தமிழர்களின் தங்க நகைகளாக கருதப்படும் எத்தனிக்ஸ், டிவாய்ன், பிரிஷியா, வைரம், விராஸ் ஆகிய ஐந்தும் தங்கம் என்ற விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


ஒவ்வொரு மணப்பெண்ணும் அணிந்திருந்த அனைத்து நகைகளும் தங்கம் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால், இந்த மணப்பெண்கள் அணிந்திருக்கும் நகைகளைப் பார்த்து, வரும் காலங்களில் திருமணம் புரியும் மணப்பெண்கள் இந்த நகைகளை வாங்கி திருமணத்தன்று அணிய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மணப்பெண்களுக்கு மட்டும் இல்லாமல், மணம் புரியும் ஆண்களுக்கும் மலபார் நகைகள் வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். திருமணத்தில் தம்பதியருக்கான நகைகள் அனைத்தும் அவர்களின் வரவு செலவிற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


மலபார் நகைகடையிலுள்ள அனைத்து தங்க நகைகளும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொரு நகையும் அதற்கென தனித்தன்மை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதோடு நகைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று மாறுப்பட்டு சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஒவ்வொருவரின் கல்யாணமும் மற்றவர்களை விட மாறுப்பட்டு இருக்க நகைகள் செய்து தருகிறோம். ஒப்பிட முடியாத அளவிற்கு நகைகள் இருப்பதை மலபார் உறுதி செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தாலிக்கொடி, நிச்சய மோதிரம், ஜிமிக்கி ஆகியவையும் தனித்துவமாக இங்கு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார். அதிலும் குறிப்பாக, பிப்ரவரி 11 வரை நகைகள் வாங்குவதற்கு தள்ளுபடி வழங்கப்படும் என்றார்.


மலபாரில் வாங்கும் நகைகளுக்கு முழுமையாகவும் பணம் செலுத்தலாம் அல்லது தவணை முறையிலும் பணம் செலுத்தலாம். பல நாடுகளிலிருந்து நகைகள் தயாரிக்கப்படுகிறது. அதோடு, வாடிக்கையாளர்களின் கற்பனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப நகைகள் செய்து தரப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த விழாவின் முக்கிய ஆதர்வாளர்கள் திவ்வியன், வஸ்த்ராவர்ணம்,சாராதா ஃப்பேஷன், டாட்டாப்லெட்ஸ், ஜியாஸ் ஆர்டிஸ்ரி, கௌசல்யா, சாலினி, துஷாரா, ஸ்டைல்ஸ் பை ஷா, லோலிதா பியுடி, அல்ய்ஸா ராய், ஜஸ்தினா மோகனதாஸ், சங்கீதா, இமேஜ் ஹன்டர்க்கும் மணபெண்களான பிரவினா, தர்மினி,பிரிதி ராணி, தாரணி, புவனேஸ்வரி, செர்லி, யோகமதி, அர்ஷ்விதா, ரவினா, சந்தியா, தீபாஸ்ரீ ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.


மலபார் நகைகடையில் விற்பனையின் மூலம் வரும் 1 விழுக்காடு லாபத்தை ஏழை மக்களுக்கு பெருநாள் காலங்களில் உதவிகள் வழங்கப்படும் என்று மலபார் முயற்சியையும் அவர் தெரிவித்தார். அதோடு, பல கிளைகள் திறந்திருப்பதால் வேலை வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
எனவே, மக்கள் நிச்சயம் மலபாரில் வந்து நகைகள் வாங்க வேண்டுமென மலபார் நகைக்கடை உரிமையாளர் கேட்டுக் கொண்டார்.