பௌர்ணமி அமாவாசை நிகழ்வது எப்படி

புவி ஞாயிறை சுற்றுகிறது, மதி (திங்கள் / நிலா / சந்திரன்) புவியைச் சுற்றுகிறது என்பதை நாம் அறிவோம். மேலும், இவை (ஏறத்தாழ) கோள வடிவானவை என்பதையும் அறிவோம்.விண்வெளியைப் பொறுத்தவரை விண்மீன்கள் தான் ஒளிக்கான மூலங்கள். ஞாயிறு மண்டலத்தின் ஒளிமூலம் ஞாயிறு மட்டுமே. பிற அனைத்து விண்மீன்களின் ஒளியும் அத்தனை செறிவு வாய்ந்தவை அல்ல (அதாவது, இங்கிருந்து பார்க்கையில்!)ஞாயிற்று ஒளி (ஒரு குறிப்பிட்ட நேரத்தில்) புவியின் ஒரு பகுதியை மட்டுமே ஒளியூட்டுகிறது. அவ்வாறே தான் மதிக்கும்.
புவியில் ஒளியூட்டப்பட்ட பகுதியில் நேரத்தைப் ‘பகல்’ என்றும், மற்றதில் ‘இரவு’ என்று அழைக்கிறோம்.

மதிக்குத் தானாக ஒளியில்லை என்பதையும், அது ஞாயிறின் ஒளியைத்தான் எதிரொளிக்கிறது (பிரதிபலிக்கிறது!)புவியின் பகல் நேரப் பகுதியில் மதி இருந்தாலும் ஞாயிறின் ஒளிக்கு முன் அது மங்கி, நமக்குத் தெரியாது. புவியின் இரவு நேரப் பகுதியில் தான் மதியை நாம் காண இயலும்.
மதியின் ஒரு பகுதி மட்டுமே (கிட்டத்தட்ட ஒரு அரைகோளம் மட்டுமே) ஞாயிறினால் ஒளியூட்டப்பட்டுள்ளது என்ற நிலையில், புவியிலிருந்து நாம் காணும் கோணத்தைப் பொறுத்து அந்த ஒளியூட்டப்பட்ட பகுதியின் வடிவம் மாறுபடுகிறது.
ஒளியூட்டப்பட்ட முழு ‘முகமும்’ தெரிவதை முழுநிலா நாள், வெள்ளுவா (பௌர்ணமி) என்கிறோம்.

ஒளியூட்டப்படாத முழு முகம் தெரிவதை அமாவசை , காருவா நாள் என்கிறோம்.
இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோணத்தில் தெரியும் மதிமுகத்தைத் தான் ‘பிறை’ என்கிறோம். மதி தனது சுற்றுப் பாதையில் இரண்டு புள்ளிகளில் இருக்கும் போது மட்டுமே ஞாயிறு, புவி, மதி ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமையும், அந்நிலையில் அமாவாசையும் பௌர்ணமியும் சேர்ந்தால் மட்டுமே கிரகணம் நிகழும்.மதியின் இந்த இரண்டு புள்ளிகளும் அதன் சுற்றுப்பாதையில் நேரெதிராக (180 பாகை அப்பாற்பட்டு) அமைந்திருக்கும் . இவற்றைத்தான் நாம் ‘ராகு’, ‘கேது’ என்னும் நிழற்கோள்கள் (சாயா கிரகம்) என்கிறோம்!(ராகு , கேது என்கிற பாம்பு சூரியன் , சந்திரனை ‘விழுங்கும்’ கிரகணப் புராணக் கதை இப்போது ஏதோ பொருள் பொதிந்ததைப் போலத் தோன்றுகிறதல்லவா ? உண்மைதான் அது வெறும் கற்பனை அல்ல, ஒரு விண்ணிகழ்வின் அழகிய கற்பனை! )


ராகு, கேது புள்ளிகளை ஆங்கிலத்தில் ’டரயேச nடினநள’ என்று அழைப்பர். இவற்றைப் பாம்பின் தலை , உடலாக ஏன் உருவகித்தனர் என்பதை இந்த ‘லூனார் நோட்’ பற்றி படித்துப் பார்த்தால் அறிந்துகொள்ளலாம். சீன வானியலில் இவற்றை டிராகன் விலங்கின் தலையாகவும் வாலாகவும் உருவகப்படுத்தியுள்ளனர்! ஞாயிறு உதயமாகும் நேரம், விடிகாலை, மறையும் நேரம் மாலை.
திங்கள் ஒவ்வொரு நாளும் வேறு வேறு நேரங்களில் உதயமாகும்.
திங்கள் இன்று ஒரு நேரத்தில் உதித்தால், அடுத்த நாள், சுமார் 50 நிமிடங்கள் தாமதித்து உதயமாகும்.


15 தினங்களில் 15 *50 = 750 நிமிடங்கள் தாமதித்து உதயமாகும். 15 தினங்களில் சுமார் 12 மணி நேரம் தாமதமாக உதயமாகும்.ஞாயிறு உதயமாகும் (விடிகாலை) அதே நேரத்தில் திங்களும் உதயமானால், அந்நாளையோ, திங்களையோ அமாவாசை என்கிறோம்.திங்களின் பின்புலத்தில் , ஞாயிறு இருப்பதால் திங்கள் ஒரு கறுப்பு தோசைக்கல் போன்று தோற்றமளிக்க வேண்டும். ஆனாலும் ஞாயிறின் தக தக தீப ஒளியில், நம்மால் அதைக் கண்ணுற முடியாது. ஆக அமாவாசை அன்று ஞாயிறின் முன்னே திங்கள் இருந்தும், நம்மால் அதை காண இயலாது . அன்று ஞாயிறோடு விடிகாலையில் புறப்பட்டு விண்ணில் கை கோர்த்து பயணிக்கும் திங்கள் மாலையில் படிஞாயிறில் (மேற்கில்) மறைகிறது.


அமாவாசை இரவில் வானில் இவ்விரண்டும் இல்லா நட்சத்திர ங்களின் அணிவகுப்பைத் தான் நாம் காணலாம்.அமாவாசை கழிந்து 15 தினங்களில், ஏற்கெனவே கூறியவாறு, திங்கள் சுமார் 12 மணி நேரம் தாமதமாக உதயமாகும்.
அதாவது , ஞாயிறு மேற்கே மறையும் பொழுது , திங்கள் கிழக்கே உதயமாகும்.
ஞாயிறின் ஒளி , திங்கள் தட்டில் பட்டு அதை , வெள்ளித்தட்டு போல ஒளிரச் செய்யும்.
இதுவே பௌர்ணமி, முழு நிலா , வெண்மதி,அன்று இரவு முழுவதும் ஞாயிறை நேரடியாகக் காணமுடியாத போதும், திங்கள் ஆடி ( கண்ணாடி) நமக்கு அவ்வொளியைப் பிரதி பலிக்கும்.மாதம் அல்லது மாசம் அல்லது திங்கள் என்பது ஒரு கால அளவாகும்.இரு தொடர் அமாவாசை நாட்களுக்கு இடைப்பட்ட காலம் சுமார் 30 நாட்கள். இதையே நாம் ஒரு திங்கள் அல்லது மாதம் என்கிறோம்.
MOON என்ற திங்களின் ஆங்கில வார்த்தை moonth, month ஆக மருவியது . திங்கள் நிலவையும் குறிக்கும், மாதத்தையும் குறிக்கும்.

ஒரு முறை தக்கன் சிவபெருமானை துதித்துக் கடும் தவம் புரிந்து பல ஆற்றல்களைப் பெற்றான். பல சக்திகளைப் பெற்றுக் கொண்ட தக்கன் சற்றே இறுமாப்புக் கொண்டு அலைந்தான். அவன் மணந்து கொண்ட மனைவிகள் மூலம் பல ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றெடுத்தான். ஆனால் பரிதாபம் என்ன என்றால் அவனுடைய எந்தப் பிள்ளைகளினாலும் அவனுக்கு பெருமைக் கிடைக்கவில்லை. ஆகவே அவன் மனம் நொடிந்து போனான்.


மீண்டும் சிவபெருமானை துதித்தார். சிவபெருமானின்
அருளினால் அவனுக்கு இருபத்தி ஏழு பெண்கள் பிறந்தார்கள் .
அவர்கள் அனைவரையும் நன்கு பேணி வளர்த்து வந்த தக்கன் அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளையை தேடி வந்தான். அப்போது அதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த சந்திரன் தனக்கு அவர்களை மணம் செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைக்க அதை ஏற்றுக் கொண்ட தக்கனும் சந்திரனுக்கு அவர்கள் அனைவரையும் திருமணம் செய்து வைத்தார்.முதலில் சில வருடங்கள் அனைத்து மகள்களின் வாழ்கையும் இனிமையாகவே கழிந்தன.


சந்திரனும் தினமும் ஒரு மனைவி என ஒவ்வொரு பெண்ணுடனும் ஒவ்வொரு நாளைக் கழித்தாலும் அவர்களில் மூத்தவளையும், இளையவளையும் அதிகம் நேசித்து அவர்கள் இவருடனேயே அதிக நேரத்தைக் கழிக்கலானார். மற்றவர்களை ஒதுக்கி வைத்தார். அதனால் கவலைக் கொண்ட அனைத்துப் பெண்களும் தனது தந்தையிடம் சென்று அது குறித்து முறை இட்டார்கள். அவனும் சந்திரனுக்கு எத்தனையோ எடுத்துக் கூறியும் சந்திரன் தக்கனின் அறிவுரையை ஏற்க மறுத்தார். ஆகவே கோபமடைந்த தக்கனும் இனி சந்திரன் அவரிடம் இருந்த அனைத்துக் கலைகளையும் இழக்க வேண்டும் என்று சாபமிட்டார். அந்த சாபத்தின் விளைவாக சந்திரனின் கலைகள் அனு தினமும் மெல்ல மெல்ல அழியத் துவங்கின.


சந்திரனின் வனப்பு அழியத் துவங்கியது. சந்திர ஒளியும் குறைவுற்றது.
அதனால் பிரபஞ்சத்தில் சந்திர ஒளி குன்றியதினால் பல பிரச்சனைகள் தோன்றலாயின. சந்திரனிடம் மொத்தம் பதினைந்து அற்புதமான சக்தி வாய்ந்த கலைகள் இருந்தன . அவற்றை ஒவ்வொன்றாக இழக்கத் துவங்கிய சந்திரனிடம் எஞ்சி
இருந்தது பதினைந்தாவது கலை தான் அதையும் சந்திரன் இழந்து விட்டால் இரவில் ஒளியே இருக்காது.


சந்திரனின் மகிமையும் முற்றிலும் மறைந்து விடும். அதைக் கண்டு கவலைப்பட்ட சந்திரன் தக்கனின் தந்தையான பிரும்மாவிடம் சென்று நடந்ததைக் கூறி அவரை தக்கனுடைய சாபத்தை விலக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் பிரும்மனோ தன்னால் அதை செய்ய முடியாது என்றும் சிவபெருமானினால் மட்டுமே அதை செய்ய இயலும் என்றும் கூறி விட வேறு வழி இன்றி சந்திரன் சிவபெருமானிடம் சென்று நடந்ததைக் கூறி அழுதார். ஆனால் சிவபெருமானும் தான் வரம் கொடுத்த தக்கனும் உண்மையில் முனிவர்களுக்கு நிகராக விளங்கி வந்ததினால் அதை எளிதில் மாற்ற முடியாது என்பதினால், சந்திரனிடம் இருந்த கடைசி கலையை தான் தனது முடியில் வைத்துக் கொள்வதாகவும், அப்படி வைத்துக் கொண்டப் பின் அதை தக்கனின் சாபம் அழிக்க முடியாது என்றும், தான் சந்திரனை அந்த பதினைந்தாவது கலையுடன் சேர்த்து தன் முடிக்குள் வைத்துக் கொண்டாலும், சந்திரன் முன்பைப் போலவே அனைத்து கலைகளையும் மீண்டும் பெறுவார் என்றும் கூறினார். ஆனால் அதில் இருந்த ஒரு சிறிய சங்கடத்தையும் சந்திரனுக்கு விளக்கினார்.


சந்திரனை தன் தலையில் பதினைந்தாவது கலையுடன் தான் முடித்து வைத்துக் கொண்டதும், ஒவ்வொரு நாளாக சந்திரனின் ஒவ்வொரு கலையும் சந்திரனிடம் மீண்டும் சென்று அவரை சக்தி மிக்கவர் ஆக்கி பதினைந்தாம் நாள் எப்போதும் போலவே அவர் பிரகாசிப்பார் என்றும், மறு நாள் முதல் மீண்டும் ஒவ்வொரு நாளும் அவர் கலைகள் அவரை விட்டு விலகும் என்றும், மீண்டும் பதினைந்தாம் நாள் அவர் கலைகள் அனைத்தையும் இழந்து விட்டப் பின் ஒழி இழப்பார் என்றும் கூறினார்.
ஆனால் மீண்டும் அதற்கு அடுத்த நாள் முதல் கலைகள் மீண்டும் அவருக்கு திரும்பும் என்றும் கூறினார்.


இப்படியாக ஒவ்வொரு பதினைந்து நாளும் சந்திரனின் கலைகள் விலகி அவர் ஒளி இல்லாமல் இருக்க அதுவே அம்மாவாசை என்றும், அடுத்த பதினைந்து நாளில் மீண்டும் அவரிடம் போய் சேரும் கலைகளினால் அவர் பிரகாசிப்பதினால் அதுவே பௌர்ணமியாகவும் ஏற்கப்பட்டது.இப்படி அறிவியலும் புராணமும் விளக்கும் இந்த பௌர்ணமி அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களை வணங்கி அவர்களுக்கு அந்நாளில் தர்ப்பணம் கொடுத்து , முன்னோரின் சாபத்திலிருந்து விடுப்பட்டு அவர்களின் நல்லாசி பெறுவோம்.