4ஆவது முறையாக மிம்கொய்ன் சிறு மற்றும் வர்த்தகத் தொழிலியல் விருது & விருதளிப்பு விழா
மிம்கொய்ன் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லீம் வர்த்தகத் தொழிலியல் சபை 4ஆவது முறையாகச் சிறு, நடுத்தர வர்த்தகக் கருத்தரங்கு & GOLDEN DINNER விருதளிப்பு விழாவையும் மிகப் பிரமாண்ட முறையில் ஏற்பாடுச் செய்துள்ளது.
சனிக்கிழமை பிப்ரவரி 3ஆம் தேதி, MATRADE KUALA LUMPUR., மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிந்து, பயனுள்ள செயல்திட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரத்தில் தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வர்த்தகக் கருத்தரங்கும் விருது விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் அனைத்து வணிகச் சமூகத்துடன் இணைந்து அவர்களின் தொழில்துறைகளை மேம்படுத்தி அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லவும் இந்தக் கருத்தரங்கு பெரும் அளவில் துணை புரிகின்றது.
மலேசிய உள்ள அனைத்து இந்திய முஸ்லிம் தொழில்முனைவோர்களும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவும், வர்த்தகப் பரிமாற்றம் செய்யவும், தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான 3 முக்கியக் கூறுகளையும் இது உள்ளடக்கி, ஓர் உறுதியான தளத்தை உருவாக்கத் துணை புரிகின்றது.
இந்தக் கருத்தரங்கில் பல்வேறு தொழில் துறைகளைச் சார்ந்த 7க்கும் மேற்பட்ட முன்னணி பேச்சாளர்கள் இதில் தங்களது அனுபவங்களையும் வெற்றிக் கதைகளையும் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றார்கள்.
வர்த்தக அடையாளம், குடும்பத் தொழில் மாற்றம், பெண்களின் பங்களிப்பை எப்படி அதிகரிப்பது போன்ற தலைப்புகளை இந்தக் கருத்தரங்கு உள்ளடக்கியுள்ளது.
அதோடு ழுடிடனநn னுiயேச விருதளிப்பு விழாவில் தொழில் துறையில் மிகப் பெரிய சாதனைப் படைத்த முன்னோடி வர்த்தகர்களுக்கு விருதுகளும் வழங்கப்படவிருக்கின்றன.
மேல் விவரங்களை www.mimcoin.org என்ற அகப்பக்கத்தில் காணலாம்.