இஸ்மாவின் மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.
2024 ஆம் ஆண்டுப் பள்ளிக் காலாண்டு தொடங்கவிருக்கும் நிலையில் பாங்கி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் 60 மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷரிட்சான், காஜாங் நகராண்மைக் கழக ஆட்சியர் சங்கிதா சந்திரமோகன், தொழிலதிபர் டத்தோ பிரபாகரன், இஸ்மா தலைவர் கவிதா செல்வின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின் வாயிலாகச் சுமார் 60 மாணவர்களுக்கு ரி.ம.50 மதிப்பிலான மைடீன் காசோலை வழங்கப்பட்டது.
ஒரு மாணவருக்கு அடிப்படைக் கல்வி என்பது மிகவும் முக்கியமானது என பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷரிட்சான் தெரிவித்துள்ளார். பெற்றோர்களின் சுமையை ஓரளவிற்கு இந்த ஊக்கத் தொகையும், பள்ளி உபகரணங்களும் குறைக்கும் என தாம் நம்புவதாகவும். பாங்கி சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு இது போன்ற பயனான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வரும் இஸ்மா தலைவர் கவிதா செல்வின், காஜாங் நகராண்மைக்கழக ஆட்சியாளர் சங்கீதா சந்திரமோகன் ஆகியோரைப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சிக்கு நேரில் வருகையளித்து ஆதரவளித்த பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷரிட்சான் அவர்களுக்கும் பெற்றோர்களுக்கு நிதியுதவி அளித்த Dato Paduka சதீஷ் குமார். டத்தோ சந்திரன் பெரியசாமி, டாக்டர் சுரேந்திரன், தங்கவேலு அய்யாரூ, கணேசன் மணி, சுப்ரமணியம் சின்ன பிள்ளை என அனைவரின் பங்களிப்புக்கும் தாம் கடைமைப்பட்டுள்ளதாக இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் இஸ்மா தலைவருமான கவிதா செல்வின் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சி தொடர்பாகக் காஜாங் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்ச்சியின் ஊடக அன்பர்களான தமிழ் மலர் நாளிதழ், மலர் டி.வி, HARAPAN DAILY மற்றும் மலேசியக் கலை உலக ஊடகத்திற்கும் தம் நன்றியைப் பகிர்ந்தார்.