‘பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2’ ஆஸ்ட்ரோவில் மீண்டும் மலர்கிறது

கோலாலம்பூர், பிப்.7,
புதிய உள்ளூர் திறமைகளை வெளிக்கொணர்ந்து, ஆர்வமுள்ள இளம் பாடகர்கள் தங்கள் இலக்குகளைத் தொடர இந்தத் தளத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் பிரபலமான உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியான பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-உடன் மீண்டும் மலர்கிறது. 11 பிப்ரவரி 2024 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் இந்தப் பிரபல உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கண்டு மகிழலாம்.


ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 1-இன் வெற்றியைத் தொடர்ந்து, இன்னும் சுவாரஸ்யமான அம்சங்களுடன் இந்த ரியாலிட்டி பாடல் போட்டியின் சீசன் 2-ஐ எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதுவரை ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் கண்ட எங்களின் பிற அசல் உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டிகளை விடப் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 1, 56ரூ அதிக ரசிகர்களின் எண்ணிக்கையைப் பெற்ற மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்பதைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சீசன் 2 தொடர்ந்து எங்களின் ரசிகர்களை மகிழ்விக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய சீசனைக் கண்டு களிப்பார்கள் என்று நம்புகிறோம்.” என நேற்று ஆஸ்ட்ரோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.


10 வாரச் சவாலானப் போட்டியைக் கையாளும் நோக்கில் போட்டியாளர்கள் தங்களின் குரல் திறனை மேம்படுத்த வழிகாட்டும் புகழ்பெற்ற உள்ளூர் இசையமைப்பாளர் ஜெய்யை முதல் முறையாக ஒரு வழிகாட்டுநராக பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2 அறிமுகப்படுத்தும். நடுவர்களாகப் பொறுப்பேற்கும் உள்ளூர் இசைத்துறையைச் சேர்ந்த பாடகர்களான டாக்டர் பர்ன் மற்றும் ப்ரீத்தா பிரசாத் அவர்களுடன் கைகோர்க்கும் பின்னணிப் பாடகர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் எனப் பல்துறையில் பிரசித்திப் பெற்ற யுகேந்திரன் வாசுதேவனை இந்த ரியாலிட்டி பாடல் போட்டி தாங்கி மலரும். ஆழ்ந்த இசை அறிவு மற்றும் திறன்களுடன் பகிர்ந்து கொள்ளப் பல வருட அனுபவங்களைக் கொண்டிருக்கும் இந்தப் பன்முகத் திறன் கொண்ட நடுவர்கள், போட்டியாளர்கள் தங்களைப் பெரிதும் சவால் செய்யவும் குறிப்பிடத்தக்கப் படைப்புகளின் தரநிலைகளை அடையவும் ஊக்குவிப்பர்
“குக்கூ” நிதி ஆதரவாளராக திகழும் இப்போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வெல்வதோடு “குக்கூ” தயாரிப்புகளையும் வீட்டிற்குத் தட்டிச் செல்வர்:

முதல் நிலை வெற்றியாளர் ரிம50,000, குக்கூ கிராண்டே நீர் சுத்திகரிப்பான்
மற்றும் ராக்கெட்பியூல் என்டர்டெயின்மென்ட்

இரண்டாம் நிலை வெற்றியாளர்: ரிம25,000 மற்றும் குக்கூ யு மாதிரிக் காற்றுச்

மூன்றாம் நிலை வெற்றியாளர் ரிம 10,000 மற்றும் குக்கூ பி10 பிரஷர் மல்டி குக்கர்

பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-ஐ புகழ்பெற்ற உள்ளூர் திறமையாளர்களான செயின்ட் டிஎப்சி மற்றும் விக்கி ஆகியோர் தொகுத்து வழங்குவர். இருபத்து நான்கு போட்டியாளர்களுக்கு இடையேயான கடுமையான போட்டியால் பார்வையாளர்கள் கவர்ந்திழுக்கப்படுவர் என்பது உறுதி என்றார்.