புதிய உணவுகளுடன் மலேசிய கே.எஃப்.சிசீனப் புத்தாண்டை வரவேற்கிறது

பெட்டாலிங் ஜெயா, பிப்.7-
சீனப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் கே.எஃப்.சி புதிய மூன்று அவகையான உணவுகளை அறிமுகம் செய்துள்ளது.
நேற்று பிப்ரவரி 6,2024 தொடங்கி அனைத்து கே.எஃப் சி இடங்களிலும் கேஎப்சி ஃபயரி கோல்டன் எக் க்ரஞ்ச், கேஎஃப்சி ஃபயரி கோல்டன் பர்கர், கோல்டன் பக்கெட் உடன் ஜலாபெனோ சீஸ் பாப்பர்ஸ். எனும் புதிய வகையான கே.எஃப்.சி உணவுகளை வாடிக்கையாளர்கள் பெறத் தொடங்கலாம்.
ஃபியரி கோல்டன் எக் க்ரஞ்ச், பர்கர் ஆகியவை கேஎஃப்சியின் கோல்டன் எக் சீரிஸில் முட்டையின் தனித்துவ சுவையை வெளிப்படுத்தும் உணவுகளாக சமீபத்தில் சேர்க்கப்பட்டவையாகும்.


அதிக சுவைக்கு இன்னும் மெருகூட்டும் வகையில் உலகின் மூன்றாவது மிக காரமான மிளகாயின் சுவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடிக்கும் காரத்தன்மையையும் உப்பின் தன்மையையும் அனைத்து வகையான மசாலாவின் சுவையையும் உணரும் வகையில் கோல்டன் கிரீம் வண்ணத்தில் உணவின் உட்புற வெளிப்புறத் தன்மை அமைந்திருக்கும்.


கேஎஃப்சி மலேசியாவின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி பிரேம்நாத் உன்னிகிருஷ்ணன் கூறுகையில், கோல்டன் எக் சீரிஸ் காரமான உணவாகும். காரமான உணவு மலேசியர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் போது கே. எஃப். சி. மலேசியா இந்த சீனப் புத்தாண்டுக்காக மக்களுக்குப் பிடித்த முறையில் 3 புதிய உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்கம் எப்போதும் செல்வம், செழிப்பின் அடையாளமாக உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த டிராகனின் ஆண்டை செல்வம், செழிப்பைக் கொண்டு வரவேற்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்காக இந்த உணவு ஆறிமுகப்படுத்தியுள்ளோம்’ என்று அவர் கூறினார்.


சாப்பாட்டுப் பட்டியலில் மசாலாவின் மற்றொரு உணவைச் சேர்க்கும் வகையில், கே. எஃப். சி. ஜலபேனோ சீஸ் பாப்பர்ஸை அறிமுகப்படுத்துகிறது. இந்த உணவு தற்பொழுது ஒவ்வொரு கேஎஃப்சி கோல்டன் பக்கெட்டிலும் கிடைக்கின்றன .
வித்தியாசமான சுவையுடன் தங்க வருடத்தை வரவேற்கும் இந்தக் குறைந்த நேர விற்பனையைத் தவறவிடாதீர்கள்.


உங்களின் அருகாமையிலுள்ள கே.எப்.சி மலேசிய விற்பனையகத்தில் நேற்று பிப்ரவரி 6, 2024 தொடங்கி கிடைக்கப்பெறுகின்றன. தி ஃபியரி கோல்டன் எக் க்ரஞ்ச், ஃபியரி கோல்டன் கெக் பர்கர், ஜலாபெனோ சீஸ் பாப்பர்ஸ் உடன் கோல்டன் பக்கெட் காரசாரமான சுவையான கே.எஃப்.சி புதிய உணவுகளை உண்டு மகிழுங்கள்.