ZAHID HAMIDI மீது மகாதீர் வழக்கு!
மகாதீர் பிறப்பால் ஒரு மலாய்க்காரர் இல்லை என துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான ZAHID HAMIDI கருத்து தெரிவித்த நிலையில் ZAHID HAMIDI மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டதாக மகாதீரின் வழக்கறிஞர் Mior Nor Haidir Suhaimi தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மகாதீரைக் குறித்து பேசும் போது மகாதீரைக் குறிப்பிடுவதற்காகக் குட்டி எனும் அடைமொழியை அவர் பயன்படுத்தியதாகவும் இது கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி KELANA JAYA வில் நடந்த அம்னோ கூட்டத்தில் அவர் இவ்வாறு மகாதீரை இழிவுப்படுத்தியதால் இவ்வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் Mior Nor Haidir Suhaim விளக்கமளித்தார்.
தற்போது முன்னாள் பிரதமர் மகாதீர் IJN மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் Mior Nor Haidir Suhaim தெரிவித்தார்.