உலகை அதிரவைத்த தங்கத் தாரகை ஷாமளாராணி உலக கராத்தே போட்டியில் தங்கம் வென்று சாதனை

கோலாலம்பூர், பிப். 20-
நாட்டின் தேசிய கராத்தே வீராங்கனை சி.ஷாமளாராணி, உலக கராத்தே போட்டியில் தங்கம் வென்று உலகையே அதிரச் செய்துள்ளார்.
நேற்று முந்தினம் சைபிரஸ் லார்னாக்காவில் நடைபெற்ற உலக கராத்தே போட்டியில் 25 வயது நிரம்பிய தங்கத் தாரகை ஷாமளாராணி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவா ரோட்டிகுவெஸை 9:5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பெண்கள் பிரிவில் 50 கிலோ கராத்தே போட்டியில் சாதனை படைத்துள்ள ஷாமளாராணி, இதற்கு முன்னர் சீ விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளார்.


2023ஆம் ஆண்டு மே மாதம் கம்போடியாவில் நடைபெற்ற சீ போட்டிக்குப் பிறகு 9 மாதங்களுக்குப் பின் தாம் இந்த சாதனையைப் படைத்திருப்பதாக ஷாமளா ராணி கூறினார்.ஆசியப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்து ஏமாற்றமடைந்தேன். அந்த ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த உலகப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறேன் என்று ஷாமளாராணி மகிழ்ச்சியுடன் கூறினார்.