துன் தாயிப் காலமானார்

சரவா மாநில முன்னாள் ஆளுநர் துன் தாயிப் மஹ்மூத் இன்று காலை கோலாலம்பூரில் மரணமடைந்தார்.கோலாலம்பூர் சிவிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 4.28 மணிக்கு காலமானார்.

சரவா மாநில சுற்றுலா, படைப்பாற்றல் தொழில், கலைநிகழ்ச்சிகள் அமைச்சர் டத்தோ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா இதனை உறுதிப்படுத்தினார்.மேலும் சரவா மாநில சட்டமன்றத்தில் 87 வயது துன் தாயிப்பிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறினார்.