மலேசியச் சுற்றுலாத்துறையின் புதிய தலைமை இயக்குநராக மனோகரன் பெரியசாமி நியமனம்

கோலாலம்பூர், பிப்.28-
மலேசியச் சுற்றுலாத்துறை தலைமை இயக்குநராக இருந்த டத்தோ டாக்டர் அம்மார் அப்துல் காபார் பணிமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய தலைமை இயக்குநராக மனோகரன் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்கான மலேசியாவின் சுற்றுலாத்துறை இயக்குநராக மூன்று தவணை காலம் மனோகரன் சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கான மலேசியாவின் சுற்றுலாத்துறை இயக்குநராக இருந்த காலகட்டத்தில், 2021ஆம் ஆண்டு இந்தியா, மும்பாயில் தேசியச் சுற்றுலா இயக்கத்தின் அலுவலகத்தையும் அவர் அமைத்துள்ளார்.


மேலும், ஆசிய, ஆப்பிரிக்கா வட்டாரத்திற்கான அனைத்துலக சுற்றுலா ஊக்குவிப்பிற்கான மூத்த இயக்குநராகவும் மனோகரன் பணியாற்றியுளார்.
இதற்கிடையில், நேற்று முன்தினம், மனோகரன் பெரியசாமி அதிகாரப்பூர்வமாக மலேசியாவின் சுற்றுலாத்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மலேசியச் சுற்றுலாத்துறை அதிகாரப்பூர்வ முகநூல் அகப்பக்கத்தில் வாழ்த்து பதிவைப் பதிவேற்றியுள்ளது.