2024 ஆம் ஆண்டின் 2-ஆவது உலக தங்க வணிகர்கள் மாநாடு

கோலாலம்பூர், பிப்.29-
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலோக, தொழில்துறை நிபுணர்கள் 2-ஆவது முறையாகக் கலந்து கொள்ளும் 2024 ஆம் ஆண்டின் தங்க வணிகர்கள் மாநாடு மலேசியாவின் ஜேடபள்யு மேரியட் விடுதியில் நடைபெற்றது.
மலேசிய தங்க வணிகர்கள் மாநாடு 2024 இல் நடைபெற்ற இந்த நுண்ணறிவு கலந்த விவாதங்கள், உலகளாவிய தங்கச் சந்தைகள் பற்றிய தெளிவான புரிதலையும் மேம்பட்ட அறிவையும் குறிப்பாக ஆசிய சந்தைகள் மிகப்பெரிய அளவில் புரிதலை பிரதிநிதிகளுக்கு வழங்கியிருக்கும் என எம்ஏஜியின் தலைவர் டத்தோ வீரா லுயிஸ் எங் கூறினார்.
உலகின் எந்தப் பகுதியிலும் நகை வியாபாரத்தைத் திறப்பது பற்றி தெளிவாக அறிந்து கொள்ளும் திறன் வெற்றிக்கான திறவுகோலாகும் என்று அவர் வணிகர்களிடம் தெரிவித்தார்.


ஆசிய தங்கச் சந்தைகளில் ஈடுபடுவது வெளிநாட்டு வணிக உரிமையாளர்கள், முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, பொருளாதார நிலைப்பாட்டில் பெரிய அளவில் அந்தந்த நாடுகளுக்கும் பயனளிக்கும். ஆசியாவின் மையத்தில் முதன்மையாக அமைந்துள்ள ஓர் இஸ்லாமிய நாடான மலேசியா, அடுத்த உலகளாவிய நிலையில் தங்கத்தை முதலீடு செய்யும் நாடாக மாறுவதற்கு பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
மலேசியாவில் தங்கப் பொருட்கள் தரம் மற்றும் தூய்மை ஆகியவற்றின் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக ஷரியா தரநிலைகளின்படி நடத்தப்படும் கடுமையான சோதனைகள் காரணமாக பெரும்பாலும் உயர் தரத்தில் உள்ளன.
அதுமட்டுமின்றி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள உள்ளூர் சந்தைகள் ஏற்கெனவே நன்றாக உள்ளன. எனவே, மலேசிய தங்கச் சந்தைகளில் ஈடுபடுவது அனைவருக்கும் உடனடி வருவாயை அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
விலைமதிப்பற்ற உள்ளூர் உலோகத் தொழிலின் நலனைப் பாதுகாப்பது, தொழில் தொடர்ந்து செழித்து வருவதை உறுதி செய்வதாகும். எனவே, உலக அரங்கில் பொருத்தமான போட்டித்தன்மையுடன் இருக்க, உலகெங்கிலும் உள்ள விலைமதிப்பற்ற உலோக நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய தங்கக் கண்ணோட்டம், முதன்மை சந்தைப் போக்குகள், சமீபத்திய தங்கத் தரநிலைகள் ஆகியவற்றில் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.


உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட உலகளாவிய விலைமதிப்பற்ற உலோக முதலீட்டுத் தலைவர்கள், முக்கிய தொழில்துறை நிறுவனங்கள் பங்கு கொண்ட இந்த மாநாட்டில், உலக தங்கத் வணிகர்கள், உலகளாவிய தங்க சந்தை போக்குகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டதோடு, அனைத்துலக வர்த்தகத்திற்கான அதன் சாத்தியங்களை முன்னிலைப்படுத்தினர்.
இதில், மலேசிய இந்தியர் நகை வணிகர், பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கேபிடி உரிமையாளர் தங்கதுரை, 5 ஸ்டார் உரிமையாளர் புகழேந்தி, கொப்பாத்தா நிறுவனத்தின் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.