ஒற்றுமைத்துறை அமைச்சின் மக்கள் மத்தியஸ்தர்களாக ஐந்து இந்தியர்கள் நியமனம்

 ( தி.ஆர்.மேத்தியூஸ்)

பினாங்கு, மார்ச் 1 –
மக்களிடையே நிலவும் பிரச்சனைகளுக்கு நடுநிலையாக இருந்து,தீர்வு காணும் பிரதிநிதிகளாக தேசிய ஒற்றுமைத் துறையில் கீழ் மக்களின் மத்தியஸ்தர்களாக 5 இந்தியர்கள் நியமிக்கப்பட்டனர்.காளிதாஸ் இராமசாமி,எம்.பத்மநாதன்,கே.முனியாண்டி,கே.முருகேஸ்வரன் மற்றும் எல்.பாலு ஆகியோராவர்.


அண்மையில் தலைநகரில் நடைபெற்ற நிகழ்வில்,தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் மற்றும் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோரிடமிருந்து அதற்கான நியமனச் சான்றிதழ்களை இவர்கள் பெற்றுக்கொண்டனர்.


மக்கள் மத்தியில் நிலவும் எந்தவொரு தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கும் மத்தியஸ்தர்களாக இருந்து தீர்த்து வைக்கும் கடமையும் .பொறுப்பும் இவர்களுக்கு உண்டு.மேலும் அந்தந்த பகுதிகளில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைப்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐவரின் மிகப்பெரிய கடமையுணர்வாகும் என காளிதாஸ் இராமசாமி தெரிவித்தார்.


எனவே எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கான உரிய தீர்வு உண்டு.அதற்கு அப்பாற்பட்டு சட்டத்தை சொந்தமாக கையில் எடுத்துக் செயல்படுவது முறையல்ல என கடந்த 12 ஆண்டுகளாக மக்களின் மத்தியஸ்தராக செய்யப்பட்டு வரும் நிபோங் தெபாலைச் சேர்ந்த சமூக சேவையாளருமான அவர் தெரிவித்தார்.