2024ஆம் ஆண்டின் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாநாடு

கோலாலம்பூர், மார்ச்.1-
2023 ஆம் ஆண்டில் பொருளாதார சவால்களும் அதிக பணவீக்கமும் இருந்தாலும், எதிர்பார்ப்புகளை மீறிய நிலையில் மலேசியாவின் பொருளாதாரம் 329.5 பில்லியன் உயர்வை அடைந்துள்ளது என்று நேற்று நடைபெற்ற 2024ஆம் ஆண்டின் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாநாட்டில் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் செனட்டர் தெங்கு டத்தோஸ்ரீ உத்தாமா ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் கூறினார்.


உற்பத்தி, சேவை, முதன்மைத் துறைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலீடுகளால் நாட்டின் பொருளாதாரம் செழித்தோங்குவதோடு மட்டுமின்றி, அதன் வர்த்தக சார்புத் திறனைக் காட்டியதில் 23 விழுக்காடாக உயர்வு கண்டுள்ளது என்று மீடாவின் தலைவர் சுலைமான் மஹ்போ கூறினார்.


கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளை விட அதிகரித்திருப்பது மலேசியாவின் நிலையை மீண்டும் உலக அளவில் முதலீட்டுக்கு உகந்த இடமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அந்நிய, உள்நாட்டு முதலீடுகளின் ஒருங்கிணைப்பு உயரிய நிலையை எட்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், கடந்த வருடத்தின் லாபஈவு அனைத்துலக அளவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் மலேசியாவின் பின்னடைவின் ஏற்றத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது எனலாம்.
இந்த ஸ்தெல்லர் முடிவுகள் 329.5 பில்லியனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு வளர்ச்சியை ஆதரிக்கும் வலுவான கொள்கைகளைக் கொண்ட நாடாகவும் மலேசியாவின் முதலீடுகள் காட்டுகின்றன.


வளர்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரமாக மாற வேண்டும் என்பது தான் மலேசிய பொருளாதாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
இனி வரும் காலங்களில், முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சும் முதலீட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நாட்டின் முதலீட்டை அதிகரிக்க உதவுவதோடு உயர்ந்த சம்பளத்துடன் நல்ல வேலை வாய்ப்பையும் மலேசியர்களுக்கு ஏற்படுத்தி தரும் என்றும் நம்பிக்கை அளித்தது.
2023ஆம் ஆண்டிற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட 329.5 பில்லியன் முதலீடுகளில் 5,101 திட்டங்கள் மலேசியர்களுக்கு 127,332 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் அமைந்துள்ளது என்று செனட்டர் தெங்கு டத்தோஸ்ரீ உத்தாமா ஜஃப்ருல் கூறினார்.


வெளிநாட்டு உற்பத்தியில் 57.2 விழுக்காடு அதாவது 188.4 பில்லியன் முதலீடும் உள்நாட்டு உற்பத்தியில் 42.8 விழுக்காடு அல்லது 141.1 பில்லியனும் முதலீட்டிலுள்ளது.
மலேசியாவில் முதன்மை முதலீடு மாநிலங்களாக பினாங்கு (71.9 பில்லியன்), கோலாலம்பூர் (58.3 பில்லியன்) , சிலாங்கூர் (55.3 பில்லியன்) , ஜொகூர் (43.1 பில்லியன்), கெடா (28.7 பில்லியன்) முன்னணி வகிக்கின்றன. இந்த ஐந்து மாநிலங்களும் 78.1 விழுக்காடு அதாவது 257.3 பில்லியனை 2023ஆம் ஆண்டு முதலீட்டிலுள்ளன.


வெளிநாடுகளின் முதலீட்டில் முதன்மையாக ஐந்து நாடுகள் மலேசியாவுடன் அதிகம் கைகோர்த்துள்ளது.சிங்கப்பூர் (43.7 பில்லியன்), நெதர்லாந்து (35.5 பில்லியன்), அமெரிக்க ஐக்கிய நாடு (21.5 பில்லியன்), கேமன் தீவுகள் (17.5 பில்லியன்), மற்றும் சீனா (14.5 பில்லியன்) ஆகும். மொத்த அனைத்துலக ரீதியில் 70.4 விழுக்காடு அதாவது 132.7 பில்லியன் பங்கு வகிக்கிறது.
அனைத்துலக ரீதியில் வழங்கப்படும் முதலீடுகள், மலேசிய நாட்டின் வளத்தையும் அனைத்துலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது என்று சுலைமான் கூறினார்.