யார் அந்த மலேசியவைச் சேர்ந்த போதைப்பொருள் மன்னன்?

இந்தியாவுடன் தொடர்புடைய மலேசியப் போதைப்பொருள் மன்னன்?

கடந்த சனிக்கிழமை இந்தியாவில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட Jaffer Sadiq க்கு தலைவனாக இருந்து செயல்பட்டதாக மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் தொடர்பில் இருப்பதாக Jaffer Sadiq வாக்குமூலம் அளித்துள்ளதாக மலேசியக் காவல் படை தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட Jaffer Sadiq

தற்போது யார் அந்த மலேசியர் எனும் கேள்வி பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது. Jaffer Sadiq தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சியிந் தொடர்புடையவராக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில். தற்போது மலேசியருக்கும் தொடர்பு இருப்பதாக வெளி வந்துள்ள செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய ரிங்கிட் 1.13 Billion மதிப்பிலான போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட Jaffer Sadiq க்கு ஆதரவாக இருந்த மலேசியாவைச் சேர்ந்த நபர் யாரென அறிய மேல்கட்ட விசாரணையைத் தொடரவுள்ளதாக மலேசியக் காவல் படை தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்துள்ளார்.