தமிழ்ப்பள்ளியைச் சீண்டும் அம்னோ! எச்சரிக்கும் டி.ஏ.பி!
மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் ஒரே மலேசிய மக்களின் ஒற்றுமைத்துவத்தைச் சீர்குலைப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Akmal salleh தெரிவித்தது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் Bukit Gasing சட்டமன்ற உறுப்பினர் Rajiv Rishyakaran கடும் கண்டனத்தையும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Akmal salleh ஐ, நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். Bukit Gasing சட்டமன்ற உறுப்பினர் Rajiv Rishyakaran, Let’s have coffee. I’ll belanja என தெரிவித்தது மீண்டும் டி.ஏ.பிக்கும் அம்னோவுக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Akmal salleh நானும் ரெடி தான், அதற்கு முன்னர் இடத்தையும் நேரத்தையும் தெரிவியுங்கள் என பதிலளித்துள்ளார். தாய்மொழிப் பள்ளிகள் குறித்து சர்ச்சையான பதிவுகளை வெளியிட வேண்டாம் என முன்னதாக ஒற்றுமை துறை துணை அமைச்சர் ஆரோன் டகாங் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.