PKR ஒரு சுத்தமான கட்சி என்பதை ஹசான் கரீம் விளக்க வேண்டும்! – புவாட் சர்காசி கேள்வி
பிகேஆரில் இணைந்த மற்ற கட்சிகளின் பெரிய தலைவர்கள் குறித்து பிகேஆர் எம்பி ஹசான் கரீமின் கருத்து குறித்து அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி, கேள்வி எழுப்பினார்.
அன்வார் இப்ராஹிமின் கட்சி ஒன்றும் “குப்பைத் தொட்டி” அல்ல எனவே, பி கே ஆரின் சுத்தமான பிம்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நேற்று ஹசான் கரீம் குறிப்பிட்டிருந்தார்.
எனவே மற்ற கட்சிகளில் இருந்து விலகி வரும் உயர்மட்டத் தலைவர்களை ஏற்றுக் கொள்வதில் கவனமாக இருக்குமாறு பிகேஆரை அவர் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த புவாட், பிகேஆர் அதிகாரத்தைத் தேடுவதில் மட்டுமே ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.
சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் மற்றும் ஹம்சா ஜைனுதீன் ஆகியோர் பிகேஆரில் சேர விண்ணப்பித்தால் அவர் எதிர்ப்பாரா?” என்று தமது முகநூல் பதிவில் புவாட் கூறியுள்ளார்.
பிகேஆர் ஒரு “சுத்தமான” கட்சி என்று அவர் ஏன் நினைக்கிறார் என்பதை விளக்குமாறு ஹசானுக்கு புவாட் அழைப்பு விடுத்தார்!